[X] Close

ஆப்கானில் பாதுகாப்புப் படை தாக்குதல்: 54 தீவிரவாதிகள் பலி


54

  • kamadenu
  • Posted: 13 Jun, 2019 14:09 pm
  • அ+ அ-

ஆப்கானிஸ்தானில் சாபுல் மாகாணத்தில் அரசுப் படைகள் நடத்திய தாக்குதலில் 54 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். பலர் காயமடைந்தனர்.

இதுகுறித்து ஆப்கான் அரசுப் படைகள் தரப்பில் புதன்கிழமை கூறும்போது,‘‘ஆப்கானிஸ்தானின் காபூல் மாகாணத்தில் செவ்வாய்கிழமை சாபுல் மாகாணத்தி ஆப்கான் அரசுப் படைகள் நடத்திய தாக்குதலில் தலிபான் தளபது உட்பட 53 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். 17 பேர் காயமடைந்தனர்.

இந்தத் தாக்குதல் தலிபான்கள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக அளிக்கப்பட்டது. இந்த தாக்குதலில் 6 பாதுகாப்பு வீரர்களும் பலியாகினர்” என்று கூறப்பட்டுள்ளது.

தலிபான்கள் ஆதிக்கம்

ஆப்கானிஸ்தானில் அரசுப் படைகளுக்கும் தலிபான்களுக்கும் இடையே உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது. அரசுப் படைகளுக்கு ஆதரவாக அமெரிக்க கூட்டுப் படையும் அங்கு முகாமிட்டுள்ளன.

இந்த ஆண்டின் தொடக்கத்தில் தலிபான் அமைப்பைப் சேர்ந்த தற்கொலைப் படைத் தீவிரவாதி தலைநகர் காபூலில் வெடிகுண்டுகள் நிரப்பிய ஆம்புலன்ஸை வெடிக்கச் செய்ததில் 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். அண்மைக்காலமாக தலிபான்களின் தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன.

கடந்த மூன்று வருடங்களில் தலிபான்களின் ஆதிக்கம் ஆப்கானிஸ்தானில் அதிகரித்து வருவதாக அமெரிக்கா சமீபத்தில் வெளியிட்ட அறிக்கையில் கூறி இருந்தது குறிப்பிடத்தக்கது.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close