[X] Close

எல்லை தாண்டிய பசுமாடு; தண்டனையை ரத்து செய்த அரசு: ஒரு சுவாரஸ்ய கதை


penka-the-bulgarian-cow-escapes-death-term-after-global-outcry

  • பாரதி ஆனந்த்
  • Posted: 12 Jun, 2018 14:36 pm
  • அ+ அ-

எல்லை என்றால் மனிதனுக்கு மட்டுமல்ல மாடுகளுக்கும் கூட பிரச்சினைதான் போலும்!
பல்கேரியா அரசு நேற்று (திங்கள்கிழமை) ஒரு முக்கிய உடன்படிக்கைக்கு வந்தது. ஐரோப்பிய யூனியன் எல்லையைக் கடந்தததற்காக மரணத்தைத் தழுவவிருந்த பசு மாட்டுக்கான தண்டனையை நிறுத்திவைத்தது தான் அந்த முக்கிய உடன்படிக்கை. சர்வதேச அளவில் எதிர்ப்பு அலைகள் கிளம்பியதை அடுத்தே பல்கேரிய அரசு இந்த முடிவை எடுத்தது.

பென்காவின் கதை..
பென்கா.. இதுதான் சம்பந்தப்பட்ட பசுமாட்டின் பெயர். அதற்கு வயது 5. கடந்த மாதம் பென்கா தனது கிராம எல்லையைக் கடந்து அருகிலிருந்த செர்பியா நாட்டு எல்லைக்குள் நுழைந்துவிட்டது. புல்வெளியில் மேய்ந்தவாறே பென்கா தெரியாமல் எல்லை தாண்டிவிட்டது.

இரண்டு வாரங்களுக்குப் பின்னர் பென்கா திரும்பியபோது பல்கேரிய அதிகாரிகள் அந்த மாட்டை கொன்றுவிட வேண்டும் என்றனர். ஐரோப்பிய ஒன்றிய தேசங்களின் விதிப்படி எல்லை கடக்கும் கால்நடைகளுக்கு உரிய உடல்நலச் சான்றிதழ் இருப்பது அவசியம்.

பென்கா 2 வாரங்கள் செர்பியாவில் இருந்துவிட்டு திரும்பியதால் அதன் உடல்நலன் குறித்து பல்கேரிய அதிகாரிகள் சந்தேகம் எழுப்பி அதைக் கொல்ல வேண்டும் என்றனர்.

இந்தத் தகவல் நாடு முழுவதும் பரவி பின்னர் சமூக வலைதளங்கள் வாயிலாக எல்லை கடந்தது. சமூக வலைதளங்களில் பென்காவுக்கு ஆதரவு பெருகியது. பிரிட்டனில் ஆதரவுக் குரல் வலுத்தது. விலங்குகள் நல ஆர்வலர்களும் முன்னாள் பீட்டல்ஸ் குழுவின் சர் பால் மெக்கார்ட்னி ஆகியோரும் பென்காவை பாதுகாக்கக் கோரி கையெழுத்துப் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து பல்கேரிய நாட்டு உணவு பாதுகாப்பு ஏஜென்சி பென்காவை முழு உடல் பரிசோதனைக்கு உட்படுத்தியது. பென்காவின் உடல் பூரணமாக நலமாக இருப்பதாக அறிக்கையும் வழங்கியுள்ளது. இதனால் பென்கா தனது சொந்த கிராமத்துக்கு விரைவில் செல்லவிருக்கிறது.

இந்த செய்தி குறித்து பிரிட்டனின் டெய்லி டெலிகிராஃப் செய்தியாளர் ஜேம்ஸ் க்ரிஸ்ப், "நான் அந்த செய்தியைப் படித்தேன். அது பெரிய பென்கா செய்தி. இனி அவள் வாழ்வாள்" என ட்வீட் செய்திருந்தார். 
 

வாக்களிக்கலாம் வாங்க

காற்றின் மொழி உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close