[X] Close

பாகிஸ்தானில் வரலாற்று சிறப்புமிக்க குருநானக் அரண்மனை தாக்குதல்


  • kamadenu
  • Posted: 27 May, 2019 14:46 pm
  • அ+ அ-

பாகிஸ்தானில் வரலாற்று சிறப்பு வாய்ந்த குருநானக் அரண்மனை மீது அடையாளம் தெரியாத ஒரு கும்பல் தாக்குதல் நடத்தியுள்ளது.

இதுகுறித்து ஊடகங்கள் தரப்பில், ''பாகிஸ்தானில் லாகூர் புதிய சாலையிலிருந்து 20 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள பதன்வாலாவில் அமைந்துள்ள வரலாற்று சிறப்பு வாய்ந்த குருநானக் அரண்மனையின் ஜன்னல்கள், கதவுகள் அடையாளம் தெரியாத ஒரு கும்பலால் தாக்குதலுக்கு உள்ளாகின.

400 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த அரண்மனை சுமார் 16 அறைகளைக் கொண்டது. இந்த அரண்மனை அக்கால செங்கற்கள், மண், களிமண்ணால் கட்டப்பட்டதால் கூடுதல் சிறப்பு பெற்று விளங்கியது.

உலகம் முழுவதிலிருந்து உள்ள சீக்கியர்கள் இந்த அரண்மனையைப் பார்வையிட்டு வந்தனர்'' என்று செய்தி வெளியானது.

இந்தத் தாக்குதல் தொடர்பாக விசாரணை நடந்து வருவதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து உரிய நடவடிக்கையை எடுக்குமாறு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானிடம் அப்பகுதி மக்கள் கேட்டுக்கொண்டனர்.

வாக்களிக்கலாம் வாங்க

'கேம் ஓவர் ' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close