[X] Close

மோடி தலைமையிலான பாஜகவின் மாபெரும் வெற்றியை தலைப்புச் செய்தியாக்கிய பாக்.ஊடகங்கள்


  • kamadenu
  • Posted: 23 May, 2019 19:01 pm
  • அ+ அ-

-பிடிஐ

பாஜக தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் மக்களவைத் தேர்தல் வெற்றியை பாகிஸ்தான் ஊடகங்கள் தலைப்புச் செய்திகளாக அறிவித்து வருகின்றன. மேலும் விரிவான செய்திகளையும் அவ் வூடகங்கள் வழங்கி வருகின்றன.

பாலாகோட் விமானப் படைத் தாக்குதல் உள்ளிட்ட பல்வேறு தேசிய பாதுகாப்புப் பிரச்சினைகளை பாஜக திரும்பத் திரும்ப சொல்லிக்கொண்டே இருந்தது பாஜகவுக்கு நல்ல பலனை அளித்துள்ளதாக அவ்வூடகங்கள் தெரிவிக்கின்றன.

இந்தியாவின் பொதுத் தேர்தல்களின் முடிவுகள் பாகிஸ்தானுக்கு மிக முக்கியத்துவம் வாய்ந்தவை. இந்தியா பாகிஸ்தான் உறவுகளின் போக்கை புதுடெல்லியில் அமையப் போகும் அடுத்த அரசாங்கம் நிர்ணயிக்கப் போகிறது. புல்வாமா தாக்குதலுக்குப் பிறகு மேலும் கீழிறங்கிவிட்ட இவ்வுறவு இத்தேர்தல் முடிவுகளே மாற்றியமைக்கும் என்ற எதிர்பார்ப்பை பாகிஸ்தான் எதிர்பார்க்கிறது.

இந்நிலையில் பாஜகவின் மாபெரும் பெற்றியை பாகிஸ்தான் ஊடகங்கள் தலைப்புச் செய்தியாக்கிவரும் விவரம் வருமாறு:

டான் பத்திரிகையின் தலைப்புச் செய்தியில் ''இந்தியா மீண்டும் வெற்றி பெற்றது'' சொல்கிறார் மோடி: பொதுத் தேர்தலில் பாஜக வரலாற்று வெற்றியை நோக்கி செல்கிறது

தனிப்பிரிவு செய்திகளை வழங்கிவரும் இச் செய்தித் தாளின் இணையதளம் அவ்வப்போது வெளிவரும் பெரும்பான்மைத் தலைவர்களின் முடிவுகளை தெரிவித்ததோடு, மாறும் நிலவரங்களையும் முக்கியத் தலைவர்களின் தேர்தல் செய்திகளையும் வழங்கியவண்ணம் இருந்தன.

ஒரு ஏஜென்ஸி செய்தியை வெளியிட்ட தி எக்ஸ்பிரஸ் டிரிபியூன் மாபெரும் தேர்தல் வெற்றியின்மூலம் மோடி எதிரிகளை பிரமிக்கச் செய்துள்ளார் என்று எழுதியுள்ளது.

இரண்டு ஊடகங்களும் மோடி தலைமையிலான பாஜக மீண்டும் ஆட்சி அதிகாரத்திற்கு திரும்பியுள்ளதற்காக உலகத் தலைவர்கள் மோடிக்கு அனுப்பிய வாழ்த்துக்களை தொடர்ந்து தெரிவித்து வருகின்றன.

எனினும் ஜியோ டிவி, அவ்வப்போது மாறும் ஆரம்ப நிலவரங்களின் புள்ளிவிவரங்களைக்கொண்டே தேர்தல் செய்திகளை தொகுத்து வழங்கிக்கொண்டிருந்தன.

பாகிஸ்தானின் அரசு வானொலி நிலையம் தனது தெற்காசிய ஒலிபரப்பில், ஆரம்ப வாக்கு எண்ணிக்கைகளிலேயே மோடி முன்னிலை வகிக்கத் தொடங்கிவிட்டார் என்று தெரிவித்தது.

ஏஆர்ஐ நியூஸ், தி நேஷன், மற்றும் தி நியூஸ் உள்ளிட்ட கிட்டத்தட்ட அனைத்து ஊடகங்களும் தேர்தல் முடிவுகளையே முக்கியமாக பாஜக வெற்றியையே கூறிக்கொண்டிருந்தன. இவை அனைத்தும் இந்திய செய்தி ஊடகங்கள் அளித்த விவரங்களையே தொகுத்து வழங்கிவந்தன.

பாஜக வென்றால் காஷ்மீரில் தீர்வு காணமுடியும்

கடந்த ஏப்ரல் மாதம் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், ''பொதுத் தேர்தலில் பா.ஜ.க வெற்றி பெறும் என்றால் இந்தியாவுடன் காஷ்மீர் பிரச்சனைக்கு தீர்வு காணக்கூடிய சிறந்த வாய்ப்புகள் உள்ளதாக தான் நம்புவதாக'' என்று தெரிவித்தார்.

பிப்ரவரி 14 ம் தேதி காஷ்மீர் புல்வாமா மாவட்டத்தில். பாகிஸ்தானைச் சேர்ந்த ஜெய்ஷ்-இ-முகம்மது (ஜீஎல்) தற்கொலை குண்டுவெடிப்பில் 40 சிஆர்பிஎஃப் வீரர்கள் கொல்லப்பட்டபிறகு இந்தியாவிற்கும் இடையே பதற்றங்கள் உருவாயின.

பெரும் சீற்றத்துக்கிடையில் இந்திய விமானப்படை (ஐஏஎப்) ஒரு பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டது. பிப்ரவரி 26 ம் தேதி பாகிஸ்தானுக்குள் ஊடுருவி பாலக்கோட்டில் மிகப்பெரிய தீவிரவாதப் பயிற்சி முகாம்களை தாக்கியது.

மறுநாளே, பாகிஸ்தானின் விமானப் படையின் தாக்குதலில் மிக் 21 போர்விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில் பிடிபட்ட ஐஏஎப் விமானி அபிநந்தன் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டார்

வாக்களிக்கலாம் வாங்க

'தும்பா' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close