[X] Close

மக்களவைத் தேர்தல் வெற்றி: ஜி ஜின்பிங், இம்ரான் கான், ஷேக் ஹசினா வாழ்த்து


  • kamadenu
  • Posted: 23 May, 2019 18:18 pm
  • அ+ அ-

மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்றதற்காக நரேந்திர மோடிக்கு சீன அதிபர் ஜி ஜின்பிங் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், வங்கதேச பிரதமர் ஷேக் ஹசினா ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

பிரதமர் மோடி, அமித் ஷா தலைமையில் மக்களவைத் தேர்தலைச் சந்தித்த பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி மாபெரும் வெற்றியை நோக்கி நகர்ந்து மீண்டும் 2-வது முறையாக மத்தியில் ஆட்சியைப் பிடிக்கிறது.

325க்கும் அதிகமான தொகுதிகளில் பாஜக கூட்டணி முன்னிலை பெற்று வருவதாக தேர்தல் ஆணையம் அதிகாரபூர்வமாகத் தெரிவித்துள்ளது. காங்கிரஸ் கட்சி 51 தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளதாகத் தெரிவித்துள்ளது.

இதனைத் தொடர்ந்து இரண்டாவது முறையாக தொடர்ந்து பாஜக தலைமையிலான அரசு அமைய உள்ளது.

இதனைத் தொடர்ந்து உலகத் தலைவர்கள் மோடிக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

சீன அதிபர் ஜி ஜின்பிங்

17-வது நாடாளுமன்றத் தேர்தலில் உங்கள் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெற்றதற்கு என்னுடைய இதயப்பூர்வ வாழ்த்துகள். உங்களுடைய உடல் ஆரோக்கியத்திற்கும் உங்களது ஒவ்வொரு வெற்றிக்கு வாழ்த்துகள்.

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான்

பாஜக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் தேர்தலில் வெற்றி அடைந்ததற்காக எனது வாழ்த்தை தெரிவித்துக்கொள்கிறேன். தெற்கு ஆசியாவில் அமைதி மற்றும் முன்னேற்ற ஏற்பட உங்களுடன் இணைந்து பணியாற்ற எதிர்நோக்கி உள்ளேன்.

மேலும், வங்கதேச பிரதமர் ஷேக் ஹசினாவும் பிரதமர் மோடிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close