[X] Close

தேர்தல் முடிவுக்குப் பிறகு இந்தோனேசியாவில் கலவரம்: 6 பேர் பலி; 200 பேர் காயம்


6-200

  • kamadenu
  • Posted: 22 May, 2019 16:13 pm
  • அ+ அ-

இந்தோனேசியாவில் தேர்தல் முடிவை அடுத்து நடந்த கலவரத்தில் 6 பேர் பலியாகினர். 200க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர்.

இந்தோனேசியாவில் கடந்த மாதம் பொதுத் தேர்தல் நடைபெற்று முடிந்தது. இந்நிலையில் தேர்தல் முடிவுகள் செவ்வாய்க்கிழமை அறிவிக்கப்பட்டன. இதில் 55.5 சதவீத வாக்குகளைப் பெற்று இந்தோனேசிய ஜனநாயக போராட்டக் கட்சி வேட்பாளர் ஜோகோ விடோடோ மீண்டும் இந்தோனேசிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இவரை எதிர்த்துப் போட்டியிட்ட முன்னாள் ராணுவ தளபதி பிராபோவோ சுபியண்டோவுக்கு 44.5 சதவீத வாக்குகள் கிடைத்தன. இதன் மூலம் இரண்டாவது முறையாக இந்தோனேசிய அதிபராக விடோடோ தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

ஆனால் இந்தத் தோல்வியை ஏற்கவில்லை என்றும் தேர்தலில் மோசடி நடந்திருப்பதாகவும் பிராபோவோ குற்றம் சாட்டினார். இதனைத் தொடர்ந்து அவரது ஆதரவாளர்கள் தலைநகர் ஜகார்த்தாவில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில் போலீஸாருக்கும் கலவரக் கும்பலுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் 6 பேர் கொல்லப்பட்டனர். 200க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர் என்று  இந்தோனேசிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தேர்தல் முடிவுகளை எதிர்த்து போராட்டங்கள் நடைபெறும்போது அதில் குண்டுவெடிப்பு சம்பவங்களை அரங்கேற்ற இருந்ததாக சந்தேகத்தின் பேரில் ஐஎஸ் தீவிரவாதிகள் 31 பேரை  இந்தோனேசிய போலீஸார் கைது செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close