[X] Close

சிரியா: வான்வழித் தாக்குதலில் பொதுமக்கள் 12 பேர் பலி


12

  • kamadenu
  • Posted: 22 May, 2019 14:43 pm
  • அ+ அ-

சிரியாவில் கிளர்ச்சியாளர்கள் பகுதியில் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில்  பொதுமக்கள் 12 பேர் கொல்லப்பட்டனர்.

இதுகுறித்து சிரிய கண்காணிப்புக் குழு கூறும்போது, ''சிரியாவில் கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டுக்குள் உள்ள இட்லிப் மாகாணத்தில் சிரிய - ரஷ்ய கூட்டுப் படைகள் நடத்திய வான்வழித் தாக்குதலில் பொதுமக்கள் 12 பேர் கொல்லப்பட்டனர். 18 பேர் பலத்த காயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்தத் தாக்குதல் நள்ளிரவு 12 மணிக்கு நடத்தப்பட்டுள்ளது.

செவ்வாய்க்கிழமை அரசுப் படைகளுக்கு எதிராக கிளர்ச்சியாளர்கள் நடத்திய தாக்குதலுக்குப் பதிலடியாக இந்தத் தாக்குதல் அரசுப் படைகள் தரப்பில் நடத்தப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

சிரியாவில் அதிபர் ஆசாத்துக்கும், ஐஎஸ் பயங்கரவாதிகளுக்கும் இடையே கடந்த ஆறு ஆண்டுகளாக நடந்து வரும் சண்டை இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளது. ஐஎஸ் பயங்கரவாதிகளின் கட்டுப்பாட்டில் இருந்த சிரியாவின் பல்வேறு பகுதிகள் அரசு கூட்டுப் படைகளால் மீட்கப்பட்டு விட்டன.

இந்நிலையில் கிளர்ச்சியாளர்களின் பிடியில் உள்ள கடைசி இடமான இட்லிப் மாகாணத்தில் இறுதிச்சண்டை நடந்து வருகிறது.

 

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close