[X] Close

பிரேசிலில் துப்பாக்கிச் சூடு: 11 பேர் பலி


11

  • kamadenu
  • Posted: 20 May, 2019 11:28 am
  • அ+ அ-

பிரேசிலில் பார் ஒன்றில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 11 பேர் கொல்லப்பட்டனர்.

இதுகுறித்து பிரேசில் அதிகாரிகள் தரப்பில், ‘‘பிரேசிலின் பெலம் நகரில் உள்ள பார் ஒன்றில் ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 11 பேர் பலியாகினர். இதில் 6 பேர் பெண்கள், 5 பேர் ஆண்கள். இந்த தாக்குதலில் ஈடுபட்டவர்களில் ஒருவர் இரு சக்கர வாகானத்தில் மற்றவர்கள் காரிலும் வந்துள்ளனர்.

கொல்லப்பட்ட அனைவரும் நெற்றியில் சுடப்பட்டு கொல்லப்பட்டுள்ளனர். இந்தத் தாக்குதல் குறித்து விசாரணை நடந்து வருகிறது” என்றார்.

பிரேசிலில் கொலை குற்றங்கள் அதிகரித்து வருவதாக சமீபத்திய புள்ளி விவரங்கள் தெரிவுத்தது குறிப்பிடத்தக்கது.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close