[X] Close

ஆஸ்திரேலியாவில் மீண்டும் ஆட்சியைப் பிடிக்கிறது சுதந்திரா கூட்டணி கட்சி: தொழிலாளர் கட்சி அதிர்ச்சி


  • kamadenu
  • Posted: 18 May, 2019 20:54 pm
  • அ+ அ-

-ஏ.எப்.பி.

ஆஸ்திரேலியாவில் 151 இடங்களுக்கு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஆளும் சுதந்திரா கூட்டணி கட்சி முன்னணி வகித்து வருவதைத் தொடர்ந்து மீண்டும் ஆட்சி அமைக்கும் சூழல் நிலவுகிறது.  

அதேசமயம் எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சி வெற்றி பெறும் என்று கருத்துக்கணிப்புகள் கூறப்பட்ட நிலையில், அதிர்ச்சித் தோல்வியை நோக்கி செல்கிறது. இந்த தோல்விக்கு பொறுப்பேற்று எதிர்க்கட்சித் தலைவர் பில் ஷார்டன் தனது பதவியை ராஜினாமா செய்யப்போவதாகத் தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலியாவில் 151 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கான தேர்தல் நேற்று நடந்தது. பெரும்பான்மைக்கு 77 எம்.பி.க்கள் தேவை. ஆளும் சுதந்திரா கூட்டணி கட்சி 73 எம்.பி.க்களுடன் ஆட்சியில் இருந்தது. எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சிக்கு 72 இடங்கள் இருந்தன.  

ஏறக்குறைய 1.65 கோடி ஆஸ்திரேலிய மக்கள் தங்கள் வாக்குகளை பதிவு செய்தனர். 47 லட்சம் மக்கள் முன்கூட்டியே நடந்த வாக்குப்பதிவான வெள்ளிக்கிழமையே தங்கள் வாக்கை செலுத்தி இருந்தனர்.

ஆளும் சுதந்திரா கூட்டணி கட்சியில் உட்பூசல் தொடர்ந்து அதிகரித்து வந்தது. இதனால், ஏற்கனவே இருந்த மால்கம் டர்ன்புல் மாற்றப்பட்டு, ஸ்காட் மோரிஸன் பிரதமராக இருந்து வந்தார்.

bill.jpg 

இந்த தேர்தலில் பருவநிலை மாற்றத்தை தடுக்கும் நடவடிக்கை என்பது தேர்தலில் முக்கிய பிரச்சினையாக இருந்தது. ஆளும் ஸ்காட் மோரிஸன் தலைமையிலான அரசு பருவநிலை மாற்றத்தை தடுக்கும் முயற்சிகளை எடுக்கவில்லை என்று எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சி குற்றம் சாட்டியது, மக்களும் அதிருப்தியில் இருந்தனர்.

பருவநிலை மாற்றத்தால் சமீபத்தில் ஆஸ்திரேலியாவில் ஏற்பட்ட பெருவெள்ளம், புயல், அதீத வெப்பம், காட்டுத்தீ , விவசாயிகள் பிரச்சினை ஆகியவற்றால் மக்கள் கவலை அடைந்திருந்தனர். தேர்தல் பிரச்சாரத்திலும் இரு கட்சியின் தலைவர்களும் பருவநிலை மாறுபாட்டை தடுக்கும் நடவடிக்கைக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று வாக்குறுதியளித்து இருந்தன.

ஆஸ்திரேலியாவில் மிகப்பெரிய நிலக்கரிச் சுரங்களும், ஏற்றுமதியில் உலக அளவில் முன்னணியில் இருப்பதால், சுரங்கங்களை மூடுவது குறித்தெல்லாம் பிரச்சாரத்தில் பேசப்பட்டது.

தேர்தலுக்கு பிந்திய கருத்துக்கணிப்புகளில் எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சி  ஆட்சியைப் பிடிக்கும் அந்த கட்சியின் தலைவர் பில் ஷார்டன் பிரதமராக வர வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், வாக்கு எண்ணிக்கை ஏறக்குறைய முடியும் நிலையில், தற்போது பெரும்பான்மைக்கு தேவையான 77 இடங்களில் ஆளும் சுதந்திரா கூட்டணி கட்சி 72 இடங்களில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இன்னும் பெரும்பான்மைக்கு 5 இடங்களே உள்ளன. அதேசமயம் எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சி 62 இடங்களே பெற்றுதோல்வியைத் தழுவியுள்ளது. தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை நடந்துவரும் நிலையில், இரவுக்குள் இறுதியான முடிவுகள் அறிவிக்கப்படும் எனத் தெரிகிறது.

இதனால், ஆளும் சுதந்திரா கூட்டணி கட்சி மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றுகிறது. பிரதமராக மோரிஸன் தொடர்கிறார்.  இது குறித்து பிரதமர் மோரிஸன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், " எனக்கு எப்போதுமே அதிசயங்கள் மீது நம்பிக்கை அதிகம். ஆஸ்திரேலிய மக்கள் மிகப்பெரிய அதிசயத்தக்க வெற்றியை அளித்துள்ளார்கள். ஆஸ்திரேலிய மக்கள் மிகவும் நல்லவர்கள், சிறந்த வெற்றியை அளித்துள்ளார்கள்" எனப் புகழ்ந்துள்ளார்.

அதேசமயம், தொழிலாளர் கட்சியின் தலைவர் பில் ஷார்டன் கூறுகையில், " இந்த தோல்வியை நான் ஏற்கிறேன். விரைவில் எனது கட்சியின் தலைவர் பதவியை ராஜினாமா செய்கிறேன். இனிமேல் தொழிலாளர் கட்சி ஆட்சி அமைக்க வாய்ப்பில்லை. எனக்கு இது அதிர்ச்சிகரமான தோல்வியாக இருக்கிறது. தேசிய நலன்கருதி, மரியாதை நிமித்தமாக பிரதமர் மோரிஸனை அழைத்து எனது வாழ்த்துக்களைத் தெரிவித்தேன் " எனத் தெரிவித்தார்.

 

வாக்களிக்கலாம் வாங்க

'சிந்துபாத்' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close