[X] Close

சீனாவுக்கு நெருக்கடி: அமெரிக்கா தொழில்நுட்ப துறையில் அவசர நிலை பிரகடனம்


  • kamadenu
  • Posted: 17 May, 2019 11:47 am
  • அ+ அ-

அமெரிக்கா அதிபர் ட்ரம்ப்  தங்கள் நாட்டின் தேசிய பாதுகாப்பை கருத்தில் கொண்டு தொழில் நுட்ப துறையில் அவசர நிலையை பிரகடனப்படுத்தி இருக்கிறார்.

ஆனால் அமெரிக்கா இதில் எந்த நிறுவனத்தின் பெயரையும் குறிப்பிடப்படவில்லை. எனினும்   இதன் மூலம் சீனாவின் தொலைத் தொடர்பு நிறுவனமான ஹூவாய் தொலைத் தொடர்பு நிறுவனம் பாதிக்கப்படும் என்று உறுதியாக நம்பப்படுகிறது.

அமெரிக்கா  சீனா இடையே வர்த்தக ரீதியான சண்டை  நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

ஈரான் மீது பொருளாதார தடை நடவடிக்கையை அமெரிக்க அரசு எடுத்துள்ள நிலையில், அந்தவிதிமுறைகளை மீறி, ஹூவாயின் துணை நிறுவனமான ஸ்கைகாம் ஈரானில் தொழில் செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், சீன உளவாளியாகச் செயல்பட்டு அமெரிக்க தேசப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்துவதாகவும், இதுகுறித்து பல முறை எச்சரிக்கை செய்திருப்பதாகவும் அமெரிக்கா கூறியிருந்தது. ஆனால் இந்தக் குற்றச்சாட்டை ஹூவாய் நிறுவனம் தொடர்ந்து மறுத்து வருகிறது.

இந்த நிலையில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தேசிய பாதுகாப்பை கருத்தில் கொண்டு அந்நாட்டின் தொழில் நுட்ப துறையில் வெள்ளிக்கிழமை அவசர நிலையை பிரகடனப்படுத்தி இருக்கிறார்.

இதன் மூலம் ஹுவாய்  அமெரிக்கா  நெட்வேர்க்கை பயன்படுத்த தட விதிக்கப்பட்டுள்ளது.

ஹூவாய் நிறுவனத்துக்கு பொருட்களை விற்பனை செய்யும் அமெரிக்கா நிறுவனங்களின் மீதான தடை வெள்ளி முதல் அமலுக்கு வந்துள்ளது.

இது சீனாவின் ஹூவாய் நிறுவனத்துக்கு மிகப்பெரும் பின்னடவை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் இந்த நடவடிக்கை குறித்து சீன வெளியுறவுத்துறைத் துறை செய்தித் தொடர்பாளர்,” அமெரிக்கா இதனை நிறுத்த வேண்டும். இரு நாடுகளுக்கு இடையேயான தொழிற்துறை ஒத்துழைப்பில் அமெரிக்கா வேறு நிலைப்பாட்டை எடுக்க வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.

வாக்களிக்கலாம் வாங்க

'கேம் ஓவர் ' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close