[X] Close

போராட்டக்காரர்களுடனான பேச்சுவார்த்தை தற்காலிகமாக நிறுத்தம்: சூடான் ராணுவம்


  • kamadenu
  • Posted: 16 May, 2019 15:04 pm
  • அ+ அ-

போராட்டக்காரர்களுடன் நடைபெற்று வந்த பேச்சுவார்த்தை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக சூடான் ராணுவம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சூடான் ஊடகங்கள், ''சூடான் தலைநகர் கார்டம்மின் மையப் பகுதியில் சூடான் ராணுவம் போராட்டக்காரர்களைத் திருப்பி அனுப்ப நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 9 பேர் காயமடைந்தனர்.  மேலும் திங்கட்கிழமை நடந்த தாக்குதலில் 6 பேர் பலியாகினர். இந்நிலையில் போராட்டக்காரர்களுடனான பேச்சுவார்த்தை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது'' என்று செய்தி வெளியிட்டுள்ளன.

இந்நிலையில் இந்த வன்முறைச் சம்பவங்கள் குறித்து சூடான் ராணுவமும், போராட்டக்காரர்களும் மாறி மாறி குற்றம் சாட்டி வருகின்றனர்.

சூடானில் 30 ஆண்டுகளாக அதிகாரத்தில் உள்ள அதிபர் ஒமர் அல் பஷிருக்கு எதிராகப் போராட்டம் வெடித்ததால் அவர் அந்நாட்டு ராணுவத்தால் அதிபர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார்.

இந்நிலையில் தற்போது அதிகாரம் சூடான் ராணுவத் தலைமையின் கீழ் உள்ளது. இந்த இடைக்கால அரசு இரண்டு ஆண்டுகள் நீடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டது.

இதனை எதிர்த்து சூடான் ராணுவ ஆட்சியிலிருந்து அகன்று உடனடியாக மக்கள் ஆட்சிக்கு வழிவிட வேண்டும் என்று சூடானில் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.

வாக்களிக்கலாம் வாங்க

'மிஸ்டர் லோக்கல்' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close