[X] Close

எங்களது எண்ணெய் கப்பல்கள் தாக்கப்பட்டன: சவுதி குற்றச்சாட்டு


  • kamadenu
  • Posted: 15 May, 2019 16:33 pm
  • அ+ அ-

கச்சா எண்ணெய் ஏற்றிச் செல்லும் எங்களது கப்பல்கள் தாக்கப்பட்டுள்ளன என்று சவுதி அரேபியா தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சவுதி தரப்பில், ''சவுதியின் கிழக்குப் பகுதியில் இரண்டு முக்கிய கச்சா எண்ணெய் ஏற்றிச் செல்லும் கப்பல்கள் தாக்குதலுக்கு உள்ளாகின. இதில் உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் பைப் லைன்களும் பாதிக்கப்பட்டன. இவற்றின்  மூலம் சவுதியின் ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ளது.

இது பயங்கரவாத நாச செயல். இவை சவுதி அரேபியாவை மட்டும் தாக்குவது இல்லை. உலக பொருளாதாரத்தையும் பாதிக்கும்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தாக்குதலுக்கு ஏமனின் ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் பொறுப்பேற்றுக் கொண்டனர்.

தென்மேற்கு ஆசிய நாடான ஏமன் நாட்டில் சன்னி பிரிவைச் சேர்ந்த அதிபர் மன்சூர் ஹைதிக்கும் ஷியா பிரிவைச் சேர்ந்த ஹவுத்தி கிளர்ச்சிப் படைக்கும் இடையே கடந்த 2015 மார்ச் முதல் உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது. இதில் அதிபர் மன்சூர் ஹைதிக்கு ஆதரவாக சவுதி அரேபியா செயல்படுகிறது. ஹவுத்தி கிளர்ச்சிப் படைக்கு ஈரான் ஆதரவு அளிக்கிறது.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close