[X] Close

சிரியாவில் அரசுக் கட்டுப்பாட்டு முகாமில் தாக்குதல்: 6 பேர் பலி


6

  • kamadenu
  • Posted: 15 May, 2019 15:27 pm
  • அ+ அ-

அரசுக் கட்டுப்பாட்டுப் பகுதியில் உள்ள முகாமில் நடத்தப்பட்ட தாக்குதலில் 6 பேர் பலியானதாக சிரிய அரசுத் தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அல் இக்பரியா தொலைக்காட்சி தரப்பில், ''சிரியாவின் தென்கிழக்கில் உள்ள அலெப்போ நகரில் உள்ள முகாமில் செவ்வாய்க்கிழமை நடத்தப்பட்ட தாக்குதலில் 6 பேர் பலியாகினர். இதில் 2 குழந்தைகளும் அடக்கம். இந்த முகாமில் சிரியா மற்றும் பாலஸ்தீனத்தைச் சேர்ந்தவர்கள் தங்கியிருந்தனர்'' என்று தெரிவிக்கப்பட்டது.

சிரியாவில் அதிபர் ஆசாத்துக்கும், ஐஎஸ் பயங்கரவாதிகளுக்கும் இடையே கடந்த ஆறு ஆண்டுகளாக நடந்து வரும் சண்டை இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளது. ஐஎஸ் பயங்கரவாதிகளின் கட்டுப்பாட்டில் இருந்த சிரியாவின் பல்வேறு பகுதிகள் அரசு கூட்டுப் படைகளால் மீட்கப்பட்டு விட்டன.

இந்நிலையில் கிளர்ச்சியாளர்களின் பிடியில் உள்ள கடைசி இடமான இட்லிப் மாகாணத்தில் இறுதிச்சண்டை நடந்து வருகிறது.

 

வாக்களிக்கலாம் வாங்க

'மிஸ்டர் லோக்கல்' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close