[X] Close

நிரந்தர ஜாமீன் மனு நிராகரிப்பு: மீண்டும் சிறைக்குத் திரும்பும் நவாஸ் ஷெரீப்


  • kamadenu
  • Posted: 07 May, 2019 17:33 pm
  • அ+ அ-

நிரந்தர ஜாமீன் வேண்டி பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் தாக்கல் செய்த மனுவை அந்நாட்டு நீதிமன்றம் நிராகரித்ததால் அவர் மீண்டும் சிறைக்குத் திரும்ப உள்ளார்.

உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்ட  பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்புக்கு அந்நாட்டு உச்ச நீதிமன்றம் நாட்டை விட்டு வெளியேறக் கூடாது என்ற நிபந்தனையுடன் மார்ச் மாதத்தில் ஆறு வார காலம் ஜாமீனை வழங்கியது.

இந்நிலையில்  சிகிச்சைக்காக வெளிநாட்டுக்குச் செல்ல வேண்டும் என  நிரந்தர ஜாமீன் வழங்கக் கோரி நவாஸ் ஷெரீப் தாக்கல் செய்த மனுவை அந்நாட்டு நீதிமன்றம் நிராகரித்து விட்டது.

இதனைத் தொடர்ந்து நவாஸ் ஷெரீப், கோட் லாக்பாத் சிறைச்சாலைக்குத் திரும்ப உள்ளார்.

முன்னதாக, அல்- அஸிஸியா உருக்கு ஆலைகள் வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்புக்கு இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றம் தண்டனை விதித்தது. 7 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற அவர், கடந்த டிசம்பர் 25-ம் தேதி லாகூரில் உள்ள கோட் லாக்பாத் சிறைக்கு மாற்றப்பட்டார்.

3 முறை பிரதமராக இருந்த ஷெரீப், ஒருமுறை கூட தனது 5 ஆண்டு பதவிக்காலத்தை நிறைவு செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

வாக்களிக்கலாம் வாங்க

'கேம் ஓவர் ' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close