[X] Close

துணை பாதுகாப்பு தலைவரை மணந்த தாய்லாந்து மன்னர்


  • kamadenu
  • Posted: 02 May, 2019 18:10 pm
  • அ+ அ-

தாய்லாந்து மன்னர் தனது பாதுகாவல் பிரிவின் துணை தலைவரை திருமணம் செய்திருக்கிறார். இதனைத் தொடர்ந்து முறைப்படி அவருக்கு அரசி பதவியையும் வழங்கப்பட்டுள்ளது

இதுகுறித்து தாய்லாந்து  ஊடகங்கள் தரப்பில், "தாய்லாந்து மன்னர் மகா வஜ்ரலாங்கோன் புதன்கிழமை தனது பாதுகாப்புப் பிரிவின் துணை தலைவரை திருமணம் செய்துக் கொண்டார்.

இதனைத் தொடர்ந்து அவருக்கு இளைய அரசி சுதிதா என்ற பட்டமும் வழங்கப்பட்டது.

இந்த திருமணம் தாய்லாந்து அரசுமுறைப் படி நடைபெற்றது. இதில் பல பாதுகாப்பு உயரதிகாரிகள் கலந்து கொண்டனர்” என்று செய்தி வெளியிட்டுள்ளனர்.

66 வயதாகும்  தாய்லாந்து மன்னர்  மகா வஜ்ராலங்கோன் 2016ம் ஆண்டு அவரது தந்தை புமிபோல் இறந்த பின்னர் மன்னரானவர்.

மன்னர் மகா வஜ்ரலாங்கோன் இதற்கு முன்னர் மூன்றுமுறை திருமணம் நடந்து விவகாரத்து பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close