[X] Close

'எங்கள் நாட்டை விட்டுவிடுங்கள்': ஐஎஸ் தீவிரவாதிகளுக்கு இலங்கை அதிபர் சிறிசேனா வேண்டுகோள்


  • kamadenu
  • Posted: 01 May, 2019 15:46 pm
  • அ+ அ-

-ராய்டர்ஸ்

ஈஸ்டர் பண்டிகையன்று இலங்கையில் தேவாலயங்கள், ஹோட்டல்களில் நடந்த மனித வெடிகுண்டு தாக்குதல்களைத் தொடர்ந்து " எங்கள் நாட்டை விட்டு விடுங்கள்" என்று இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேனா, ஐஎஸ் தீவிரவாதி அமைப்பிடம்  வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இலங்கையில் கடந்த மாதம் ஈஸ்டர் பண்டிகையின் போது நீர்கொழும்பு, மட்டக்களப்பு, கொழும்பு ஆகிய நகரங்களில் உள்ள தேவாலயங்கள், ஹோட்டல்களில் தீவிரவாதிகள் மனித வெடிகுண்டு தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 253 பேர் கொல்லப்பட்டனர், 500-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

இந்த தாக்குதலுக்கு எந்த அமைப்பும் பொறுப்பேற்காமல் இருந்த நிலையில், ஐஎஸ் தீவிரவாத அமைப்பால் ஈர்க்கப்பட்ட இலங்கையைச் சேர்ந்த சிலர் இந்த செயலைச் செய்துள்ளனர் என்று தெரியவந்தது. அதன்பின் ஐஎஸ் அமைப்பு தாக்குதலுக்கு பொறுப்பேற்றது.

இந்த தாக்குதலுக்கு மூளையாக இலங்கையில் உள்ள தேசிய தவ்ஹித் ஜமாத்  மற்றும் ஜமாதி மிலாது இப்ராஹிம் ஆகிய இரு இஸ்லாமிய அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் ஈடுபட்டிருக்கலாம் என்பதற்கான ஆதாரங்கள் இலங்கை அரசுக்கு கிடைத்தன.

குறிப்பாக தேசிய தவ்ஹித் ஜமாத் அமைப்பின் தலைவர் ஜஹ்ரன் ஹசிம் மனித வெடிகுண்டாக மாறி இறந்துவிட்டார் என்று அதிபர் சிறிசேனா அறிவித்தார்.

இந்த மனித வெடிகுண்டு தாக்குதல் தொடர்பாக இலங்கை அரசு நாட்டில் அவசர நிலையை கொண்டு வந்து சந்தேகத்திடமானவர்களை கைது செய்து வருகிறது. இந்த தாக்குதல் தொடர்பாகவும், தேசிய தவ்ஹித் ஜமாத் அமைப்போடு தொடர்பில் இருந்தவர்களை இலங்கை கிரிமினல் புலனாய்வு துறை(சிஐடி) தேடி வந்தனர்.

கடந்த ஒருவராத்தில் தேசிய தவ்ஹித் ஜமாத் அமைப்புடன் நேரடியாகவும், மறைமுகமாகவும் தொடர்பில் இருந்த 106 பேரைக் கைது செய்துள்ளனர்.

இதற்கிடையே கடந்த இரு நாட்களுக்கு முன் ஐஎஸ் அமைப்பின் தலைவர் அபுபக்கர் அல்பாக்தாதி பேசியதுபோன்று ஐஎஸ் அமைப்பு வீடியோ வெளியிட்டிருந்தது. அதில், சிரியாவில் பாகோஸ் பகுதியை ஐஎஸ் தீவிரவாதிகள் இழந்ததற்கு பதிலடியாகத்தான் இலங்கையில் தாக்குல் நடத்தினோம் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில் இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேன் தனியார் செய்தி சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

ஐஎஸ் தீவிரவாதிகள் புதிய யுக்தியுடன் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளார்கள் என்று எச்சரிக்கிறேன். சிறிய நாடுகளைக் குறிவைத்து அதன்மீது தாக்குதல் நடத்த முடிவு திட்டமிட்டுள்ளார்கள்.

எங்களுக்கு கிடைத் தகவலின்படி, வரும் 6-ம் தேதி புனித ரமலான் மாதம் தொடங்குவதால், அதற்குள்ளாக மீண்டும் ஐஎஸ். தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளார்கள் என்று தகவல் கிடைத்துள்ளது. இதனால், நாடுமுழுவதும் பாதுகாப்பு பலப்படுத்த உத்தரவிட்டுள்ளேன்.

இலங்கையில் சிறிய மதக்குழுக்களைச் சேர்ந்தவர்கள் வெளிநாடுகளுக்குச் சென்று, அங்கு ஐஸ் தீவிரவாத அமைப்பிடம் இருந்து பயிற்சி எடுத்து வந்துள்ளனர். இங்குநடந்த மனித வெடிகுண்டு தாக்குதல்களில் பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டுகள் அனைத்தும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்டவையாக இருக்கின்றன.

நான் ஐஎஸ் தீவிரவாத அமைப்பிடம் கேட்பதெல்லாம், என்னுடைய நாட்டை விட்டுவிட்டுவிடுங்கள். இவ்வாறு சிறேசேனா தெரிவித்தார்.

இதற்கிடையே இலங்கையில் நடந்த  தாக்குதலில் தேசிய தவ்ஹித் ஜமாத் அமைப்பைச் சேர்ந்த ஜஹ்ரன் ஹசிம் மூளையாகச் செயல்பட்டுள்ளார் என்று இலங்கை புலனாய்வுத்துறையினர் தெரிவிக்கின்றனர். ஏறக்குறைய 9 பேர் இந்த தாக்குதலை நடத்தியுள்ளார்கள். இவர்கள் அனைவருக்கும் சர்வதேச அளவில் உள்ள பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பு இருப்பதையும் அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர். இந்த விசாரணையில் இலங்கை அரசுக்கு, அமெரிக்காவின் எப்பிஐ, இன்டர்போல் உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் புலனாய்வு அமைப்புகளும் உதவுவதாகத் தெரிவித்துள்ளன.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close