[X] Close

சிரியாவில் மாபெரும் குண்டுவெடிப்பு: 4 மாடி கட்டிடம் இடிந்துவிழுந்ததில் பலர் பலியானதாக அச்சம்; ஏராளமானோர் சிக்கித்தவிப்பு


4

  • kamadenu
  • Posted: 25 Apr, 2019 15:18 pm
  • அ+ அ-

-ஏஎப்பி

சிரியாவில் சக்திவாய்ந்த குண்டுவெடித்ததில் நான்கு மாடிக் கட்டிடம் இடிந்துவிழுந்ததில் 18 பேர் கொல்லப்பட்டனர். மேலும் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணி நடைபெற்றுவருவதாக போர்க் கண்காணிப்பு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

வடமேற்கு சிரியாவில் அமைந்துள்ள இட்லிப் மாகாணத்தில் ஜில்ர் அல் ஷூகுர் நகரில் இச்சம்பவம் நேற்று மாலை நடந்துள்ளது. இச்சம்பவத்தின்போது போர்ப்பணிக்காக சென்ற ஒரு ஏஎப்பி நிறுவன செய்தியாளரும் அருகிலிருந்தார். இப்பிராந்தியம் முழுவதும் முன்னாள் அல்கொய்தா தொடர்புடையவர்களின் கட்டுப்பாட்டில் உள்ளதாகக் கூறப்படுகிறது.

இக்குண்டுவெடிப்பினால் எதிரில் இருந்த இன்னொரு கட்டிடமும் பாதி இடிந்துவிழுந்துள்ளது. இதன் பாதிப்பினால் சுற்றுப்பகுதியில் இருந்த பல கட்டிடங்களும் இடிந்துவிழுந்துள்ளன.

இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கச் சென்ற காவல்துறை பணியாளர் ஒருவரும் இதில் கான்கிரீட் ஸ்லாப் ஒன்று சரிந்ததில் அதனுள்ளே சிக்கிக்கொண்டார். அவரை மீட்க முயன்ற சக பணியாளர்கள் மூன்றுபேரும் உள்ளே சிக்கிக்கொண்டதாகக் கூறப்படுகிறது.

கார் வெடிகுண்டா?

போர்க் கண்காணிப்பக தலைமை அதிகாரி ராமி அப்துல் ரெஹ்மான் இதுகுறித்து தெரிவிக்கையில், ''கார் வெடிகுண்டு தாக்குதலில் இது நடந்திருக்க வேண்டும். அல்லது வெடிகுண்டுகளை சுமந்துவந்த வாகனம் ஒன்று இதை செய்திருக்கவேண்டும். மார்க்கெட் பகுதிக்கு அடுத்ததாக இங்கு வெடித்துள்ளது. துருக்கிஸ்தானிய கிளர்ச்சியாளர் ஒருவரின் மகளும் இக்குண்டுவெடிப்பின்போது பலியாகியுள்ளார்'' என்றார்.

ஆனால் அப்பகுதியில் சம்பவத்தை நேரில் பார்த்தவர்களும் உள்ளூர் காவல்துறை தலைமை அதிகாரி அப்துல் வஹாப் அல் அப்து இதுகுறித்து கூறுகையில்,

''இச்சம்பவம் நேர்ந்ததாற்கான காரணத்தை துல்லியமாக சொல்லமுடியவில்லை. இதன்மூலம் தெரியவில்லையே தவிர, பொதுமக்கள் பலர் இதில் உயிரிழந்துள்ளனர்'' என்று தெரிவித்தார்.

அபு அமர், இரு குழந்தைகளின் தந்தை, ஏஎப்பியிடம் தெரிவிக்கையில், ''நாங்கள் நின்றிருந்த இடத்திலிருந்து 50 மீட்டர் தொலைவில் தள்ளி மாபெரும் குண்டுவெடிப்பை உணர்ந்தோம். சம்பவம் நடந்த இடத்தை நோக்கி நாங்கள் ஓடினோம். அங்கே மீட்புக்குழுவினர் காயமடைந்தவர்களை வெளியேற்ற முயற்சித்தனர்'' என்றார்.

தரையெங்கும் சிதறிய உடல்பாகங்கள்

சாலையில் கிடக்கும் இடிபாடுகளின் கான்கிரிட் துண்டுகளை அகற்றும் பணியில் புல்டோசர் ஓட்டுநர்களை வழிநடத்திக்கொண்டிருக்கும் ஒரு மீட்புப் பணியாளர்

இதுகுறித்து தெரிவிக்கையில், "இடிபாடுகளின் கீழ் இன்னும் பலர் உயிருடன் சிக்கிக்கொண்டுள்ளனர், இப்பகுதியின் தரையெங்கும் நிறைய உடல் பாகங்கள் சிதறிக் கிடக்கின்றன" என்றார்.

ஹயாத் தாஹிர் அல் ஷாம் விடுதலைமுன்னணியின் நிர்வாகக் கட்டுப்பாட்டின் கீழ் இட்லிப் பிராந்தியம் உள்ளது. இது அல் கொய்தாவிடமிருந்து பிரிந்து வந்த அமைப்பாகும். இதற்கு முன்பு அல் நுஸ்ரா முன்னணி என அழைக்கப்பட்டது.

இச்சம்பவத்திற்கு இன்னும் எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை எனினும், துருக்கிஸ்தானிய இஸ்லாமியக் கட்சி,  வெளிநாட்டு ஜிகாதிகளான முஸ்லிம் சிறுபான்மையின இனக் குழுவினரான இவர்கள் மிகப்பெரிய அளவில் ஒரு அமைப்பாக ஜஸ்ர் அல் ஷூகூரில் திரண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சிரியா போரில் கடந்த 2011ல் இருந்து 3,70 ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். அரசுக்கு எதிரான கிளர்ச்சியாளர்களுடன் ஏற்பட்ட ராணுவ தாக்குதலினால் மில்லியன் கணக்கான மக்கள் சிரியாவிலிருந்து வெளிநாடுகளுக்கு புலம்பெயர்ந்து வருகின்றனர்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close