[X] Close

இலங்கை வெடிகுண்டு தாக்குதல்: ட்ரம்ப், புதின் உள்ளிட்ட தலைவர்கள் கண்டனம்


  • kamadenu
  • Posted: 22 Apr, 2019 08:20 am
  • அ+ அ-

இலங்கையில் தேவாலயங்கள், நட்சத்திர ஓட்டல் உள்ளிட்ட இடங்களில் நிகழ்ந்த குண்டுவெடிப்புச் சம்பவத்துக்கு அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் உள்ளிட்ட உலக நாடுகளின் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக, அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:இலங்கையில் நிகழ்ந்த பயங்கர குண்டுவெடிப்புச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்காக அமெரிக்க மக்கள் சார்பில் எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவிக்கும் அதே நேரத்தில், இலங்கைக்கு உதவுவதற்கு அமெரிக்கா தயாராக இருக்கிறது என்பதையும் உறுதிபட கூறுகிறேன் என ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

பிரிட்டன் பிரதமர் தெரசா மே வெளியிட்டுள்ள அறிக்கையில், "இலங்கையில் தேவாலயங்களில் நிகழ்த்தப்பட்ட தாக்குதல் அதிர்ச்சியடையச் செய்துள்ளது. இந்தத் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், காயமடைந்தவர்களுக்காகவும் இறைவனை பிரார்த்திக்கிறேன்’’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல், இந்த தாக்குதல் சம்பவத்துக்கு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மாரீசன், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் உள்ளிட்ட தலைவர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close