[X] Close

இலங்கை வெடிகுண்டு தாக்குதல்: ராகுல் காந்தி கண்டனம்


  • kamadenu
  • Posted: 22 Apr, 2019 08:24 am
  • அ+ அ-

இலங்கையில் நடந்த தொடர் குண்டு வெடிப்பு தாக்குதலுக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ராகுல் காந்தி தனது ட்விட்டர் பதிவில், ‘‘கொழும்பில் பல இடங்களில் நடந்த குண்டுவெடிப்புகளில் 200-க்கும் மேற்பட்டோர் இறந்ததையும் 300-க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததையும் அறிந்து வருத்தமும் அதிர்ச்சியும் அடைந்தேன். மிருகத்தனமான இந்த தீவிரவாத தாக்குதலை வன்மையாகக் கண்டிக்கிறேன். இறந்தவர்களின் குடும்பங்களுக்கு என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிக்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்’’ என்று கூறியுள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், ‘‘புனித ஈஸ்டர் நாளில் இலங்கை தேவாலயங்களில் நடந்த தீவிரவாதத் தாக்குதல் ஆழ்ந்த வருத்தம் அளிக்கிறது. இந்த துயரமான நேரத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உறுதுணையாக நிற்போம்’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close