[X] Close

தைவானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்


  • kamadenu
  • Posted: 18 Apr, 2019 14:02 pm
  • அ+ அ-

தைவானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தின் காரணமாக கட்டிடங்கள் குலுங்கியதாக செய்திகள் வெளியாகின.

இதுகுறித்து அமெரிக்க நிலநடுக்க மையம் தரப்பில், “தைவானில் இன்று (வியாழக்கிழமை) சக்தி வாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6. 1 ஆக பதிவாகியது.

இந்த நில நடுக்கத்தின் ஆழம் 19 கிலோமீட்டர்.  இதன் காரணமாக தைவானில் பல இடங்களில் கட்டிடங்கள் குலுங்கி உள்ளது.  மேலும் மலைப் பாதைகளில் பாறைகள் விழுந்து போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது” என்று கூறியுள்ளது.

இந்த நில நடுக்கம் காரணமாக கடலில் மேற்பரப்பில் சில மாற்றங்களை உணர்ந்ததாக ஜப்பான் புவியியல் மையம் தெரிவித்துள்ளது.

 நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த தகவல் ஏதும் இதுவரை வெளிவரவில்லை.

தைவானில் கடந்த வருடம் 6. 4 ரிகர் அளவில் ஏற்பட்ட நில நடுக்கத்துக்கு 17 பேர் பலியாகினர்.

1999 ஆம் ஆண்டு தைவானில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நில நடுக்கத்துக்கு 2,400 பேர் பலியாகினர்

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close