[X] Close

நாட்ரே - டாம் தேவலாயத்தை மீட்ட தீயணைப்பு வீரர்களுக்கு போப் பிரான்சிஸ் நன்றி


  • kamadenu
  • Posted: 17 Apr, 2019 18:24 pm
  • அ+ அ-

பிரான்ஸின் பாரம்பரியச் சின்னமான நாட்ரே - டாம் தேவலாயத்தை தீ  விபத்திலிருந்து மீட்ட தீயணைப்பு வீரர்களுக்கு போப் பிரான்சிஸ் நன்றி தெரிவித்துள்ளார்.

பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் யுனெஸ்கோவின் பாரம்பரியச் சின்னங்களில் ஒன்றான 850 ஆண்டு பழமையான நாட்ரே-டாம் தேவாலயத்தில் செவ்வாய்க்கிழமை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

உடனடியாக தீயணைப்பு வீரர்களுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்கள் வரவழைக்கப்பட்டனர். மேலும், அருகில் இருக்கும் தேவாலயங்களும் தொடர்ந்து மணிகளை ஒலிக்கவிட்டு உதவிக்கு வரக் கோரின. இந்தத் தீ விபத்தில தேவாலயத்தின் மரத்திலான முக்கியக் கூரை எரிந்தது.

பல மணி நேரப் போராட்டங்களுக்குப் பின்னர் தீயணைப்பு வீரர்கள் தேவாலயத்தின் தீயை அணைத்தனர்.மேலும் அதிலிருந்த பாரம்பரியப் பொருட்களையும் பத்திரமாக மீட்டனர்.

இதுகுறித்து செயின்ட் பீட்டர் சதுக்கத்தில் போப் பிரான்ஸிஸ் பேசும்போது, ''மிகுந்த வருந்தத்தக்க நிகழ்வு. தேவாலயத்தின் கூரை எரிந்தது போன்ற நிகழ்வுகளால் நான் அதிர்ச்சி அடைந்தேன். 

தங்கள் உயிரைப் பணயம் வைத்து தேவாலயத்தில் ஏற்பட்ட தீயை அணைத்த தீயணைப்பு வீரர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்'' என்றார்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close