[X] Close

காட்டுத் தீயாய் பரவும் வெறுப்புணர்வு பேச்சுக்கள்: ஐ.நா.பொதுச் செயலாளர் குத்தேரஸ் வேதனை


  • kamadenu
  • Posted: 15 Apr, 2019 07:26 am
  • அ+ அ-

இணையதளங்களில் வெறுப்பு பேச்சுகள் காட்டுத் தீயாய் பரவுவதாகவும் அதைத் தடுக்க வேண்டும் என்றும் ஐ.நா.பொதுச் செயலாளர் அந்தோனியோ குத்தேரஸ் வலியுறுத்தி உள்ளார்.

ஐ.நா.சபையின் மாதிரி உச்சி மாநாடு ஆண்டுதோறும் நடைபெறுகிறது. இதில், உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பள்ளி, கல்லூரிகளில் பயிலும் சுமார் 4 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்கின்றனர். இந்த ஆண்டுக்கான உச்சி மாநாடு கடந்த 12-ம் தேதி நடைபெற்றது. இதில் ஐ.நா. பொதுச் செயலாளர் அந்தோனியோ குத்தேரஸ் பேசியதாவது:இணையதளங்களில் வெறுப்பு பேச்சுகள் காட்டுத் தீயாய் பரவுகின்றன. நியூசிலாந்து மற்றும் அமெரிக்காவின் பிட்ஸ்பர்க் உட்பட பல்வேறு நகரங்களில் உள்ள மத வழிபாட்டுத் தலங்கள் மீது மர்ம நபர்கள் சமீபத்தில் தாக்குதல் நடத்தினர். இதுபோன்ற வெறுப்பு பேச்சுகள், தாக்குதல்கள் அதிகரிப்பதற்கான மூல காரணங்கள் மற்றும் தவறுகளை கண்டறிந்து அதற்குத் தீர்வு காண சர்வதேச சமுதாயம் முன்வர வேண்டும். குறிப்பாக இளைய தலைமுறையினருக்கு இதில் முக்கிய பங்கு உள்ளது.

பன்முகத்தன்மை துடிப்பானது

பன்முகத்தன்மைதான் நமது சமுதாயத்தை துடிப்பானதாகவும் சுவாரஸ்யமானதாகவும் வைத்திருக்க உதவுகிறது. வெறுப்பு பேச்சு மற்றும் வழிபாட்டுத் தலங்கள் மீதான தாக்குதலை தடுக்க வேண்டுமானால், சமூக நல்லிணக்கத்தில் முதலீடு, பன்முகத்தன்மையில் முதலீடு என நிறைய முதலீடு தேவைப்படுகிறது. பல்வேறு மதம், மொழி, இனத்தைச் சேர்ந்தவர்களாக மக்கள் இருந்தாலும் அவர்களை சமூகம் ஏற்க வேண்டும். எந்த ஒரு சர்வதேச பிரச்சினைக்கும் தனித்து நின்று எந்த ஒரு நாடும் தீர்வு காண முடியாது. அனைத்து நாடுகளும் ஒருங்கிணைந்து செயல்பட்டால்தான் பிரச்சினைக்கு தீர்வு காண முடியும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

வாக்களிக்கலாம் வாங்க

'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close