[X] Close

நல்லெண்ண அடிப்படையில் பாகிஸ்தான் சிறையிலிருந்து 100 இந்திய மீனவர் விடுவிப்பு


100

  • kamadenu
  • Posted: 15 Apr, 2019 07:23 am
  • அ+ அ-

-பி.டி.ஐ

நல்லெண்ண அடிப்படையில் பாகிஸ்தான் சிறையில் இருந்து மேலும் 100 இந்திய மீனவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

காஷ்மீரில் நிகழ்த்தப்பட்ட புல்வாமா தாக்குதலுக்கு பதிலடியாக, பாகிஸ்தானின் பாலகோட் பகுதியில் இயங்கி வந்த தீவிரவாதிகள் முகாம் மீது இந்திய விமானப் படையினர் கடந்த பிப்ரவரி 26-ம் தேதி தாக்குதல் நடத்தினர்.

இதையடுத்து, இரு நாடுகளுக்கு இடையே போர் பதற்றம் ஏற்பட்டது.

இதனை தணிக்கும் விதமாக, பாகிஸ்தான் சிறையில் அடைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்கள் 360 பேரை விடுவிப்பதாக பாகிஸ்தான் அரசு அறிவித்தது.

அதன்படி, கடந்த 7-ம் தேதி அந்நாட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த 100 மீனவர்களை பாகிஸ்தான் அரசு விடுவித்தது.

இந்நிலையில், நேற்று முன்தினம், தங்கள் நாட்டு சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த மேலும் 100 மீனவர்களை பாகிஸ்தான் விடுவித்தது. இவர்கள், வாஹா எல்லையில் இந்திய ராணுவ அதிகாரிகளிடம் இன்று ஒப்படைக்கப்படுவார்கள் எனக் கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து, மீதமுள்ள மீனவர்களை வரும் 22 மற்றும் 29 ஆகிய தேதிகளில் விடுவிக்கப்படுவார்கள் என பாகிஸ்தான் அரசு தெரிவித்துள்ளது.

வாக்களிக்கலாம் வாங்க

'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close