“ஆதாரமற்ற, வஞ்சக கதைகள்” - ஐநாவில் காஷ்மீர் குறித்த பாகிஸ்தானின் பேச்சுக்கு இந்தியா பதிலடி


பிரதிக் மாத்தூர்

ஜெனிவா: ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையில் காஷ்மீர் பேசிய பாகிஸ்தான் தூதரின் கருத்தினை, ‘ஆதாரமற்ற, வஞ்சக கதைகள்’ என்று இந்தியா பதிலடி கொடுத்துள்ளது.

ஐ.நாவுக்கான இந்தியாவின் நிரந்தர தூதரக அமைச்சர் பிரதிக் மாத்தூர் செவ்வாய்க்கிழமை கூறுகையில், "இன்றைய நாளின் முன்னதாக, ஒரு தூதர் இந்த அவையை ஆதாரமற்ற மற்றும் வஞ்சககதைகளைப் பரப்புவதற்காக தவறாக பயன்படுத்தினார். அது என்னை ஆச்சரியப்படுத்தவில்லை. இந்த கண்ணியம் மிக்க சபையின் நேரத்தினை மிச்சப்படுத்துவதற்காக, இந்த கருத்துக்களுக்கு எந்த வித பதிலளித்தும் அதனை நான் மதிப்புமிக்கதாக்கமாட்டேன்" என்று தெரிவித்தார்.

ஐ.நா. பாதுகாப்பு சபையின் வருடாந்திர அறிக்கை மீது ஐ.நா. பொதுச் சபையில் நடந்த விவாதத்தின் போது, இந்தியாவின் அறிக்கையினை வழங்கிய மாத்தூர் இவ்வாறு பேசினார். இந்த விவாதத்தின் போது பேசிய பாகிஸ்தானின் தூதர் முனீர் அக்ரம் தனது பேச்சில் காஷ்மீர் குறித்தும் பேசினார். அதற்கு பதிலடியாக மாத்தூர் இவ்வாறு பதிலடி கொடுத்திருந்தார்.

சமீபத்தில் ஐக்கிய நாடுகளின் பல்வேறு தளங்களில். விவாதிக்கப்படும் விஷயங்கள் அல்லது மன்றத்தின் கருப்பொருள் பற்றி பொருட்படுத்தாமல் பாகிஸ்தான் தொடர்ந்து காஷ்மீர் பிரச்சினையை எழுப்பி வருகிறது.

இதனிடையே சர்வதேச அரங்கங்களில் காஷ்மீர் குறித்து பாகிஸ்தான் எழுப்பும் அனைத்து பிரச்சினைகளையும் இந்தியா நிராகரித்து வந்தது." யூனியன் பிரதேசங்களான ஜம்மு காஷ்மீர் மற்றும் யூனியன் பிரதேசமான லடாக் ஆகியவை இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி. அது இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாக இருந்தது, இருக்கிறது, இருக்கும்" என்று தெரிவித்தது.