[X] Close

இந்தநாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்


12

  • kamadenu
  • Posted: 31 Mar, 2019 08:30 am
  • அ+ அ-

பாகிஸ்தானின் ஆதரவுடன் செயல்படும் தீவிரவாத இயக்கமான ஜெய்ஷ்-இ-முகமது காஷ்மீரில் பல்வேறு தீவிரவாதச் செயல்களை செய்து வருகிறது. கடந்த மாதம் காஷ்மீரின் புல்வாமாவில் நடந்த கார் குண்டு தாக்குதலில் சிஆர்பிஎப் வீரர்கள் 40 பேர் இறந்தனர். இந்த தாக்குதலுக்கு தாங்கள்தான் காரணம் என்று ஜெய்ஷ்-இ-முகமது இயக்கம் பொறுப்பேற்றுக் கொண்டது. ஜெய்ஷ்-இ-முகமது இயக்கத்தின் தலைவர் மசூத் அசார் பாகிஸ்தானில் பதுங்கியுள்ளார்.

மசூத் அசாரை சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்க இந்தியா தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளது. சமீபத்தில் நடந்த ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் அமெரிக்கா, இங்கிலாந்துடன் சேர்ந்து பிரான்ஸ் நாடும் தீர்மானம் கொண்டுவந்தது. ஆனால், இதுகுறித்து பரிசீலிக்க கூடுதல் அவகாசம் கோரி சீனா முட்டுக்கட்டை போட்டது. இந்நிலையில், மசூத் அசாரின் சொத்துகளை முடக்க முடிவு செய்துள்ளதாக பிரான்ஸ் அறிவித்துள்ளது.

இதுகுறித்து பிரான்ஸ் நாட்டின் நிதி, உள்துறை மற்றும் வெளியுறவு அமைச்சகங்கள் வெளியிட்ட கூட்டறிக்கையில், ‘‘புல்வாமாவில் நடந்த தீவிரவாதத் தாக்குதலுக்கு ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத இயக்கம் பொறுப்பேற்றது. ஜெய்ஷ்-இ-முகமது இயக்கத்தின் தலைவர் மசூத் அசாரின் சொத்துகளை முடக்க பிரான்ஸ் அரசு முடிவு செய்துள்ளது. தீவிரவாதச் செயல்களில் தொடர்புடையவர்கள் பற்றிய ஐரோப்பிய யூனியனின் பட்டியலில் மசூத் அசாரை சேர்ப்பது குறித்து ஆலோசிக்கப்படும். தீவிரவாதத்துக்கு எதிரான போரில் இந்தியாவின் பக்கமே பிரான்ஸ் இருந்துள்ளது. எப்போதும் அப்படியே இருக்கும்’’ என்று கூறப்பட்டுள்ளது.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close