[X] Close

அமெரிக்காவில் பனிப்புயலால் விமானங்கள் ரத்து


flights-cancelled-due-to-snow-storm

  • kamadenu
  • Posted: 15 Mar, 2019 10:14 am
  • அ+ அ-

அமெரிக்காவின் சில மாகாணங் களில் கடும் பனிப்புயல் காரணமாக, வாகனப் போக்குவரத்து முடங்கியதுடன் 1,300-க்கும் மேற்பட்ட விமான சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

கொலராடோ, வையோமிங், நெப்ராஸ்கா, வடக்கு டகோடா மற்றும் தெற்கு டகோடா ஆகிய மாகாணங்களின் சில பகுதிகளில் கடும் பனிப்புயல் வீசும் என அமெரிக்க தேசிய வானிலை ஆய்வு மையம் நேற்று முன்தினம் எச்சரிக்கை விடுத்திருந்தது. வானியல் வல்லுநர்களால் ‘பாம் சைக்ளோன்’ என அழைக்கப்படும் இந்த பனிப்புயல் காரணமாக, கடுமையான காற்றுடன் பனிப் பொழிவும் அதிக அளவில் காணப்படுகிறது.

இதையடுத்து, பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியில் வர வேண்டாம் என உள்ளூர் நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது. இதனால், பள்ளிகள், கடைகள், அலுவலகங்கள் ஆகியவை மூடப்பட்டுள்ளன. பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. சாலை யில் பனி படர்ந்துள்ளதால் வாகனப் போக்குவரத்து முடங்கி உள்ளது. சுமார் 1,100 வாகனங்கள் பாதி வழியில் தவிப்பதாகவும் தகவல் கிடைத்துள்ளது.

டென்வர் உட்பட பெரும்பாலான விமான நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. 1,339 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. பனிப்புயல் காரணமாக, 125 விபத்துகள் ஏற்பட்டதாகவும் வாகன ஓட்டிகள் எச்சரிக்கை யுடன் இருக்குமாறு அறிவுறுத்தப் பட்டுள்ளதாகவும் டென்வர் போலீஸார் தெரிவித்துள்ளனர்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close