[X] Close

7 பேர் விடுதலை சாத்தியமே இல்லை; திமுக அறிக்கையைக் குப்பையில் போடுங்கள்: சுப்பிரமணியன் சுவாமி


7

  • kamadenu
  • Posted: 22 Mar, 2019 12:08 pm
  • அ+ அ-

மசூத் அசாரின்  சகோதரர் மற்றும் மகன் உள்பட 44 பேரை பாகிஸ்தான் கைது செய்துள்ளது என்று பாகிஸ்தான் உள்துறை அமைச்சக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

புல்வாமா தாக்குதலை அடுத்து, பாகிஸ்தானுக்கு பயங்கரவாதம் விவகாரத்தில் கடும் நெருக்கடி கொடுக்கப்படுகிறது. இந்நிலையில் மசூத் அசாரின் சகோதரன் முப்தி அப்துல் ராவுஃப், மகன் ஹமத் அசார் (மசூத் அசார் மகன்) உள்பட 44 பேரை பாகிஸ்தான் கைது செய்துள்ளது என அந்நாட்டு உள்துறை அமைச்சர் ஷெஹ்ர்யார் கான் அப்ரீடி கூறியுள்ளார். 

இது குறித்து பாகிஸ்தான் உள்துறை அமைச்சக அறிக்கையில், “தேசிய நடவடிக்கைத் திட்டத்தை செயல்படுத்த மார்ச் 4ம் தேதி உள்துறை அமைச்சகத்தின் கூட்டம் நடைபெற்றது. இதனை அனைத்து மாகாண அரசுகளின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர், இதில் தடைசெய்யப்பட்ட அமைப்புகளின் மீதான நடவடிக்கையை துரிதப்படுத்த முடிவெடுக்கப்பட்டது. இதனையடுத்து தடைசெய்யப்பட்ட அமைப்புகளின், கண்காணிப்பில் இருக்கும் 44 பேர் தடுப்புக் காவலில் கைது செய்யப்பட்டுள்ளனர், இதில் மசூத் அசாரின் சகோதரர் முப்தி அப்துல் ராவுஃப், மசூத் அசார் மகன் ஹமாத் அசார் ஆகியோரும் அடங்குவர். விசாரணைக்காக இவர்கள் காவலில் எடுக்கப்பட்டுள்ளனர். தேசப் பாதுகாப்பு கமிட்டியின் முடிவுகளின் படி இத்தகைய நடவடிக்கைகள் தொடரும். 

அஜாஜ் சையத் என்ற எழுத்தாளர், ஜியோ டிவிக்கு இந்தச் செய்தியை அளித்தார், அப்போது மசூத் அசாரைக் கைது செய்வது பற்றியும் அடுத்த 24 மணி நேரத்தில் முடிவெடுப்பார் என்று கூறினார்.  இது நடக்குமா என்று கூற முடியாவிட்டாலும் இம்முறை பாகிஸ்தான் தங்கள் மண்ணிலிருந்து செயல்படும் தீவிரவாத அமைப்புகள் மீது கடும் நடவடிக்கை எடுத்தாக வேண்டும் என்று நிபுணர்கள் தி இந்து (ஆங்கிலம்) நாளிதழுக்குத் தெரிவித்தார். 

மூத்த பத்திரிகையாளர் காஷிப் அப்பாஸி கூறும்போது, பாகிஸ்தானின் மூத்த சிவில் மற்றும் ராணுவத் தலைமைகளிடம் தான் உரையாடிய வரையில்  “தீவிரவாத அமைப்புகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய கட்டாயத்தை உணர்ந்துள்ளனர். நிதிநடவடிக்கை பணிக்குழுவின் பன்னாட்டு நெருக்கடிகளினால் பாகிஸ்தான் தன் சொந்த மண்ணிலிருந்து இந்த அமைப்புகளை நடத்த அனுமதிக்க முடியாது, என்றார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close