[X] Close
 

ஆஸ்திரேலியாவில் இலவச சேவையை அறிவித்தது 'ஓலா' டாக்ஸி


ola-free-service

  • பால்நிலவன்
  • Posted: 12 Apr, 2018 16:09 pm
  • அ+ அ-

ஆஸ்திரேலியாவில் அங்குள்ள உள்ளூர் ஓட்டுநர்-பங்குதாரர்களுடன் இணைந்து இலவச பயண சேவையை ஓலா கார் அறிமுகப்படுத்துகிறது. இதற்கான அறிவிப்பை ஓலா நிறுவனம் இன்று அறிவித்துள்ளது.

மெல்போர்ன் நகரத்தில் உள்ள வாடிக்கையாளர்கள் இதற்கான 'ஓலா விண்ணப்பத்'தை தரவிறக்கம் செய்து கொள்ள முடியும். அவர்களது பயண சேவைகள் குறித்த விவரங்கள் பதிவு செய்யப்பட்டு கணக்கு பராமரிக்கப்படும்.

இருப்பினும், ஒரு வாடிக்கையாளர் எத்தனைமுறை இலவசமாக செல்லலாம், எவ்வளவு தூரம் செல்லலாம் என்பது விவரமாக எதுவும் குறிப்பிடவில்லை. 

அமெரிக்காவிலிருந்து இயங்கும் நிறுவனங்களோடு ஒப்பிடுகையில், சர்வதேசச் சந்தையில் போட்டியிடுவதில் சற்று சிரமமாக உள்ளதாக இந்நிறுவனம் கடந்த ஜனவரி 30 அன்று ஒப்புக்கொண்டது. ஆஸ்திரேலியாவில் பிப்ரவரி மாத பெர்த் என்ற நிறுவனத்தோடு இணைந்து தனது நிறுவனத்தின் நடவடிக்கைகளை தொடங்கிய ஓலா அதன்பின்னர் சிட்னியில் தொடங்கியது.

"வரவிருக்கும் மாதங்களில், ஆஸ்திரேலியாவில் பிரிஸ்பேன், கோல்ட் கோஸ்ட், கான்பெர்ரா, அடிலெய்டு, டார்வின் மற்றும் ஹொபோட் போன்ற நகரங்களுடன் இலவச சேவை தொடர உள்ளது.

ஆஸ்திரேலியா முழுவதும் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட உள்ளூர் ஓட்டுநர் பங்குதாரர்களிடமிருந்து பதிவுகள் பெறப்பட்டுள்ளன.

ஓட்டுநர் பங்குதாரர்களுக்கு குறைந்த அளவிலான 7.5 சதவீத கமிஷன் தொகை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் ஓட்டுநர் பங்குதாரர்கள் அதிக பணம் சம்பாதிக்க முடியும். அதேநேரம் எங்களை எளிதாகவும் அணுகலாம்

இந்தியாவில் கால் டாக்ஸி சேவை சந்தையில் உபருக்கு எதிராக தங்கள் நிறுவன சேவையை 2011ல் ஓலா தொடங்கியது. ஓலா தற்போது இந்தியாவில் 110 நகரங்களில் 125 மில்லியன் பயனாளிகளுக்கு சேவை செய்து வருகிறது.
 

தொடர்புடைய செய்திகள்

 
 




Kalathin Vasanai - Kindle Edition


[X] Close