[X] Close
 

அல்ஜீரியா  ராணுவ விமானம் விழுந்து நொறுங்கியது.  250க்கும் மேற்பட்டோர் பலி


algeria-s-defence-ministry-says-257-people-have-died-in-military-plane-crash

  • போத்திராஜ்
  • Posted: 11 Apr, 2018 18:14 pm
  • அ+ அ-

வடஆப்பிரிக்கா நாடான அல்ஜீரியாவில் ராணுவ விமானம் இன்று திடீரென விபத்துக்குள்ளாகி, தரையில் விழுந்து நொறங்கியது. இதில் 257-க்கும் மேற்பட்டோர் பலியானார்கள்

அல்ஜீரியா நாட்டின் தலைநகர் அல்ஜீயர்ஸ் அருகே இருக்கும் போபரிக் ராணுவ விமானத் தளத்தில் இருந்து இன்று காலை ராணுவத்துக்கு சொந்தமான II-76 என்ற விமானம் டின்டாப் நகருக்கு புறப்பட்டது. விமானத்தில், 200க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள், போலிசாரோ முன்னணி என்ற பிரிவினைவாத அமைப்பைச் சேர்ந்தவர் 20-க்கும் மேற்பட்டோர், விமானப் பணியாளர்கள் 10 பேர் என250க்கும் மேற்பட்டோர் பயணித்தனர்.

விமானம் போஃபரிக் விமானத் தளத்தில் இருந்து புறப்பட்டு சிறிது நேரத்தில் 30 கி.மீ தொலைவில் சென்றபோது தரையில் விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில் விமானத்தில் பயணித்த 250-க்கும் மேற்பட்டோரும் இறந்ததாக அல்ஜீரிய நாட்டு அதிகாரிகள் தெரிவிக்கின்றன.

இந்த விமான விபத்துக்கான காரணம் என்ன எனத் தெரியவில்லை. மேலும், விமானத்தில் மொத்தம் எத்தனை வீரர்கள், பயணிகள் பயணித்தார்கள் என்ற உறுதியான பட்டியலையும் அல்ஜீரிய அரசு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.

 




Kalathin Vasanai - Kindle Edition


[X] Close