[X] Close

ஏமனுக்கு ஆயுதங்கள் வழங்குவதை நிறுத்துங்கள்: ஆம்னெஸ்டி


uk-and-us-need-to-stop-weapons-supply-to-yemen-amnesty-urges

  • kamadenu
  • Posted: 07 Feb, 2019 15:13 pm
  • அ+ அ-

உள்நாட்டுப் போர் நடைபெறும் ஏமனுக்கு ஆயுதம் வழங்குவதை நிறுத்துகள் என்று சர்வதேச தன்னார்வ அமைப்பான ஆம்னெஸ்டி தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ஆம்னெஸ்டி வெளியிட்ட அறிக்கையில், ” உள்நாட்டுப் போர் நடைபெறும் ஏமனில் சண்டையிடும் கிளர்ச்சியாளர்களுக்கு ஆயுதங்கள் வழங்குவதை பிரிட்டனும், அமெரிக்காவும் நிறுத்த வேண்டும். இங்கு நினைத்துப்பார்க்க முடியாத இன்னல்களை மக்கள் சந்தித்து வருகின்றனர். இது அந்த நாட்டின் மக்கள் தொகைக்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி இருக்கிறது” என்று கூறப்பட்டுள்ளது.

ஏமன் போர்

தென் மேற்கு ஆசிய நாடான ஏமன் நாட்டில் சன்னி பிரிவைச் சேர்ந்த அதிபர் மன்சூர் ஹைதிக்கும் ஷியா பிரிவைச் சேர்ந்த ஹவுத்தி கிளர்ச்சிப் படைக்கும் இடையே கடந்த 2015 மார்ச் முதல் உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது. இதில் அதிபர் மன்சூர் ஹைதிக்கு ஆதரவாக சவுதி அரேபியா செயல்படுகிறது. ஹவுத்தி கிளர்ச்சிப் படைக்கு ஈரான் ஆதரவு அளிக்கிறது.

சவுதி அரேபியா தொடர்ந்து ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் மீது குறிவைத்து ஏமனில் தாக்குதல் நடத்தி வருகிறது. ஈரான் கிளர்ச்சியாளர்களுக்கு ஆதரவு அளித்து வருகிறது.

ஏமன் அரசுடன் இணைந்து சவுதி நடத்தும் தாக்குதலை ஐக்கிய நாடுகள் சபை முன்னரே கண்டிருந்தது  குறிப்பிடத்தக்கது.

வாக்களிக்கலாம் வாங்க

'மிஸ்டர் லோக்கல்' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close