[X] Close
 

தகவல் திருட்டால் பாதிக்கப்பட்ட ஃபேஸ்புக் பயனாளர்களில் நீங்களும் ஒருவரா?- இன்று தெரிந்துவிடும்


facebook-to-contact-87-million-users-affected-by-data-breach

  • kamadenu
  • Posted: 09 Apr, 2018 16:13 pm
  • அ+ அ-

கேம்ப்ரிட்ஜ் அனலிட்டிக்கா (Cambridge Analytica) நிறுவனத்தால் பாதிக்கப்பட்ட 8.7 கோடி ஃபேஸ்புக் பயனாளர்களின் பட்டியலில் உங்கள் பெயரும் உள்ளதா என இன்று பயனாளர்களுக்கு ஃபேஸ்புக் நிறுவனம் அறிவிக்கவுள்ளது.

ஃபேஸ்புக் சமூக வலைதளத்தை கோடானு கோடி பேர் உலகம் முழுவதும் பயன்படுத்துகின்றனர். இந்நிலையில்தான் இணைய உலகை அதிர வைத்த அந்த தகவல் திருட்டு அம்பலமானது.

இங்கிலாந்தில் கேம்பிரிட்ஜ் அனலிட்டிகா என்ற அரசியல் தகவல் ஆய்வு நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் அமெரிக்கத் அதிபர் தேர்தலில் ஃபேஸ்புக் நிறுவனத்திடமிருந்து தகவல்களைப் பெற்று மக்கள் மனதில் மாற்றத்தை உண்டாக்கி தேர்தலில் முடிவுகள் மாற பெரிதும் துணை புரிந்தது.
இதில், 2016 ஆம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தலின்போது சுமார் 5 கோடி மக்களின் தனிப்பட்ட தகவல்கள் திருடப்பட்டு கேம்பிரிட்ஜ் அனலிட்டிகா என்ற நிறுவனத்துக்கு அளிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. மேலும் ஃபேஸ்புக், தனது பயனாளர்களின் கணக்கில் உள்ள தகவல்களை அவர்களின் அனுமதியின்றி சோதனை செய்திருக்கிறது.
அமெரிக்கா மட்டுமின்றி ஜெர்மனி உட்பட பல ஐரோப்பிய நாடுளகளிலும் நடைபெற்ற தேர்தல்களில் அனலிட்டிகா நிறுவனம் இதே போன்ற முறைகேடுகளை நடந்த்தியுள்ளதும் அம்பலமாகியுள்ளது. இந்தியாவிலும் சில தேர்தல்களில் அனலிட்டிகா நிறுவனத்தின் பங்களிப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த விவகாரம் 'ஃபேஸ்புக் நிறுவனத்திற்கு எதிராக பெரும் எதிர்ப்பை கிளப்பியுள்ளது. 'ஃபேஸ்புக் நிறுவனத்தின் பயனாளிகள் விவரங்களை வைத்துக் கொண்டு அந்நிறுவனம் பெருமளவில் வர்த்தகம் செய்துள்ளதையும், வணிக நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்து பல கோடி ரூபாய் பணம் குவித்துள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்து கொண்டு இருக்கின்றன.

இந்நிலையில், கேம்ப்ரிட்ஜ் அனலிட்டிக்கா (Cambridge Analytica) நிறுவனத்தால் பாதிக்கப்பட்ட 8.7 கோடி ஃபேஸ்புக் பயனாளர்களின் பட்டியலில் உங்கள் பெயரும் உள்ளதா என இன்று பயனாளர்களுக்கு ஃபேஸ்புக் நிறுவனம் அறிவிக்கவுள்ளது.

பாதிக்கப்பட்ட பயனாளர்களுக்கு அவர்களது இணைய பக்கத்திலேயே நியூஸ் ஃபீட் மூலம் விரிவான தகவல் அனுப்பப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தகவல் திருட்டால் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் அதாவது 7 கோடி பேர் அமெரிக்காவைச் சேர்ந்தவர்கள்.

எஞ்சிய 1 கோடி மக்கள் பிரிட்டன், பிலிப்பைன்ஸ், இந்தோனேசியாவிலும், 3 லட்சத்துக்கும் மேற்பட்டோர் ஆஸ்திரேலியாவில் உள்ளனர். பாதிக்கப்பட்ட அத்தனை பயணாளர்களுக்கும் 'Protecting Your Information' என்ற தகவலுடனான லிங்க் ஒன்று அனுப்பப்படும். இதன் மூலம் மூன்றாவது நபர் தங்களது முகநூல் பக்கத்தில் ஊடுருவுவதை அவர்களால் தடுக்க முடியும்.

தொடர்புடைய செய்திகள்

 
 




Kalathin Vasanai - Kindle Edition


[X] Close