[X] Close

ட்ரம்ப் - கிம் அடுத்த சந்திப்பு: வியட்நாமில் நடைபெறுவதாக வெள்ளை மாளிகை அறிவிப்பு


trump-kim-summit-2-0-in-vietnam

கடந்த ஜூனில் சிங்கப்பூரில் நடந்த டிரம்பும் கிம்மும் முதல்முறையான சந்தித்த போது.

  • பால்நிலவன்
  • Posted: 01 Feb, 2019 16:46 pm
  • அ+ அ-

அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்பும் வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன்னும் இரண்டாவது முறை சந்திப்பு இம்மாத இறுதியில் வியட்நாமில் நடைபெற உள்ளதாக வெள்ளை மாளிகையில் மூத்த நிர்வாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இச்சந்திப்புத் திட்டம் இறுதி செய்யப்பட்டு வருகிறது என்று அதிகாரி தெரிவித்ததாக சிஎன்என் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

வட கொரியாவின் அணுசக்தி பேச்சுவார்த்தை தொடர்பாக வடகொரியாவின் தொழிலாளர் கட்சியின் துணைத் தலைவரும் ராணுவ தளபதியுமான கிம் யோங்-கோலும் நடத்திய பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து இரு தலைவர்களின் இரண்டாவது சந்திப்பு விரைவில் நடைபெற உள்ளதாக கடந்த ஜனவரி 18 அன்று வெள்ளை மாளிகை உயரதிகாரிகள் அறிவித்தனர்.

இரு தலைவர்களும் சந்தித்துக்கொண்ட கூட்டம் கடந்த ஜூன் மாதம் சிங்கப்பூரில் நடைபெற்றது.

மேலும், சீன அதிபர் ஜி ஜின்பிங்கை அமெரிக்க ஜனாதிபதி சந்திப்பது குறித்த தற்போதைய விவாதங்கள் எதுவும் இல்லை என்று மற்றொரு தகவல்கள் தெரிவிக்கின்றன.

ட்ரம்ப் மற்றும் கிம் ஆகியோரின் சந்திப்பு நிகழ்ச்சி நிரல் மற்றும் தேதி இன்னும் முடிவு செய்யப்படவில்லை.

வாக்களிக்கலாம் வாங்க

'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close