[X] Close

ஆபத்துமிக்க அணு உலைக் கழிவுகள்: அதிர்ச்சியளிக்கும் கிரீன்பீஸ் ரிப்போர்ட்


storage-of-nuclear-waste-a-global-crisis-report

பிரதிநிதித்துவப் படம்

  • பால்நிலவன்
  • Posted: 31 Jan, 2019 14:59 pm
  • அ+ அ-

"இந்த அணு சக்தி மின் நிலையங்கள் உள்நாட்டுப் பயன்பாடுகளுக்கென்றே தொடங்கி 65 ஆண்டுகளுக்கும் மேலாக ஆகியுள்ளது. இதன் கடும் ஆபத்து விளைவுகளை ஏற்படுத்தும் இதன் கதிரியக்க கழிவுகளை அப்புறப்படுத்துவதை நிர்வகிப்பதில் உள்ள சிக்கல்களுக்கு ஏதோ ஒரு நாட்டை மட்டும் குற்றம் சாட்ட முடியாது'' என்கிறார் கிரீன்பீஸ் ஜெர்மனியைச் சேர்ந்த அணுசக்தி நிபுணர் ஷாவுன் புர்ணி

குறிப்பாக, அணு சக்தி மின் உலைகளிலிருந்து வெளியேறும் கழிவுப் பொருள்கள் பூமிக்கடியில் சேகரிக்கப்படுகின்றன. நீண்ட கால சேமிப்பு தொழில்நுட்பம் போன்றவை தொடர்ந்து ஆய்வு செய்யப்பட்டுள்ளன. அதன்படி அதில் பல பிரச்சினைகள் இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது.

தற்போது, கிட்டத்தட்ட 14 நாடுகளிலிருந்து விநியோகிக்கப்பட்ட உயர்தர கதிரியக்கச் செலவுக்கான எரிபொருள் சுமார் 2,50,000 டன்கள் உலகளாவிய அளவில் கையிருப்பு உள்ளது.

இந்த எரிபொருள் சேகரிக்கப்படும் பெரும்பாலான உறைவிப்பான் தளங்கள் குளிரூட்டும் குளங்கள் என்று அழைக்கப்படுகின்றன. இப்படி இரண்டாவது முறை சேகரிப்பதில் உள்ள குறைபாடுகளால் குளிர் இழக்கும் ஒரு பெரும்பாதிப்பைப் பெறுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அணுசக்தியை மீண்டும் மீண்டும் சேமித்து வைப்பதினால் ஏற்படும் சிக்கல்கள் இவை.

ஜப்பான் நாட்டின் புகுஷிமா அணு சக்தி ஆலை 2011-ல் ஏற்பட்ட சுனாமியில் பகுதியளவு பெரும் சேதத்துக்குள்ளானது. எனினும் இதில் இருந்த எரிபொருள் குளங்களின் அதிக வெப்பம் அபாயகரமானதாக இல்லை என்று தெளிவுபடுத்தியது.

அணு சக்தி வல்லுநர்கள் குழுவால் தொகுக்கப்பட்ட 100 பக்க ஆய்வறிக்கை, பிரான்சில் மிகப்பெரிய ஏற்படும் கழிவுப்பொருட்களை நிர்வகிப்பதில் உள்ள குறைபாடுகள் அகற்றப்பட்டு விட்டன. பிரான்ஸ் அணுமின் நிலையம் அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக உள்ள இரண்டாவது மிகப்பெரிய அணுசக்தி மின்நிலையம் ஆகும்.

அதேநேரம் "பிரான்ஸில் அணுசக்திக் கழிவுகளை நீண்டகாலப் பாதுகாப்பாக அகற்றுவதற்கான நம்பகமான தீர்வு எதுவுமில்லை" என்று அறிக்கை கூறியுள்ளது.

பிரெஞ்சு மேற்பார்வை அதிகாரிகள் குழு ஒன்று லா ஹேக் தளத்தில் நார்மண்டியில் ஆய்வு செய்தது. அங்குள்ள பெரிய குளிரூட்டும் குளங்களின் தன்மையைப் பற்றிய கவலையை அக்குழு தெரிவித்தது.

இதற்கு பதிலளிக்கும் விதமாக, "லா ஹேக்கில் உள்ள குளங்கள் 2030 ஆம் ஆண்டு வரை எந்தவித ஆபத்தும் இல்லை" என்று தளத்தை நிர்வகிக்கும் எரிசக்தி நிறுவனமான ஓரானா, ஓர் அறிக்கையில் தெரிவித்தது. அமெரிக்காவில், ''பில்லியன் கணக்கான டாலர்கள் மற்றும் பத்தாண்டு கால திட்டமிடல்கள் புவியியல் கழிவுகள் அகற்றும் தளத்தை பாதுகாக்கத் தவறிவிட்டதாகவும் இதில் கூறப்பட்டது.

அமெரிக்காவில் உள்ள யூக்கா மலையின் பூமிக்கடியிலான வசதியைக் கட்டமைக்கும் பணி பல பத்தாண்டுகளாக நடந்தது. ஆனால் கடைசியில் 2010-ல் ஒபாமா நிர்வாகத்தில் அது ரத்து செய்யப்பட்டது.

இதற்கிடையில், ஐக்கிய நாடுகள் 70 சதவீதம் செலவிடப்பட்ட எரிபொருளானது பலவீனமான குளிர்ந்த குளங்களில்தான் உள்ளது. முதன்முதலாக நோக்கம் கொண்டதைவிட அதிகமாக பல மடங்கு அதிகமாக இருந்தது.

யுரேனியம் சுரங்கத்திலிருந்து உருவாகும் அணு சக்திக் கழிவு என்பது ஒரு முக்கிய சுற்றுச்சூழல் பிரச்சினை ஆகும்.

உலக அளவிலான யுரேனியம் ஆலைச் சரக்குகள், சேமித்து வைக்கப்பட்ட பகுதிகளிலிருந்து கசியும் மணல் கழிவுப் பொருட்கள் மட்டுமே 2011 வரை இரண்டு பில்லியன் டன் என மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்த அறிக்கையில் உள்ளடங்கிய மற்ற நாடுகள் பெல்ஜியம், ஜப்பான், ஸ்வீடன், பின்லாந்து மற்றும் பிரிட்டன் ஆகியவை ஆகும்.

வாக்களிக்கலாம் வாங்க

'கேம் ஓவர் ' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close