[X] Close

எல்லைச் சுவரில் சமரசம் என்பதே இல்லை: ட்ரம்ப் திட்டவட்டம்


no-compromise-on-wall-trump

  • பால்நிலவன்
  • Posted: 26 Jan, 2019 13:31 pm
  • அ+ அ-

அரசாங்கத்தின் வேலைநிறுத்தம் மூன்று வாரங்களுக்கு நிறுத்திவைக்க ஒப்புதல் அளித்த நிலையிலும், மெக்ஸிகோ எல்லையில் சுவர் கட்ட வேண்டும் என்பதில் சமசரம் செய்துகொள்ளமாட்டேன் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால் ட்ரம்ப் கூறியுள்ளார்.

அமெரிக்காவின் எல்லைப் பகுதியில் பாதுகாப்புச் சுவர் எழுப்பும் பொருட்டு, நாடாளுமன்றம் நிதி ஒதுக்குவதற்காக அந்நாட்டின் அபதிர் ட்ரம்ப் கொண்டுவந்த மசோதா வியாழக்கிழமை தோல்வியில் முடிந்தது.

இதுகுறித்து இன்று (சனிக்கிழமை) அவர் ட்விட்டரில் தெரிவித்துள்ளதாவது:

''மக்கள் எல்லோரும் எல்லைச் சுவரில் என் வார்த்தைகளை கேட்பார்கள் என நான் விரும்புகிறேன். இதில் ஒரு சலுகைக்கான ஒரு வழியும் இல்லை. மீண்டும் அரசாங்கம் நடைபெறுவதற்காக நாடாளுமன்றத்தில் ஒரு ஒப்பந்தத்துடன்தான் இதற்கு சம்மதிக்கிறேன். எல்லைச் சுவருக்காக நான் கேட்டுள்ள 5.7 மில்லியன் அமெரிக்க டாலர்கள் கிடைக்கவில்லையெனில் மீண்டும் பிப்ரவரி 15லிருந்து அரசாங்கம் முடங்கும். எல்லைச் சுவர் எழுப்புவதில் எந்தவித சமரசமும் செய்துகொள்ளப் போவதில்லை.

"நான் தெளிவாக இருக்கிறேன். ஒரு சக்திவாய்ந்த சுவர் அல்லது எஃகு தடையை கட்டியெழுப்புவதைத் தவிர உண்மையில் வேறு வழியில்லை. நாம் காங்கிரஸிலிருந்து (நாடாளுமன்றம்) ஒரு நியாயமான உடன்பாட்டைப் பெறவில்லையென்றால், அரசாங்கம் மீண்டும் பிப்ரவரி 15 அன்று மூடப்படும் அல்லது இந்த அவசர நிலைக்குத் தீர்வு காண அமெரிக்காவிற்கான அரசியலமைப்பின் கீழ் எனக்கு வழங்கப்படும் அதிகாரங்களைப் பயன்படுத்துவேன். நமக்கு பெரிய அளவில் பாதுகாப்பு தேவை."

இவ்வாறு ட்ரம்ப் ட்விட்டரில் தனது நிலைப்பாட்டை உறுதிப்படுத்தியுள்ளார்.

அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறுபவர்களைத் தடுக்க மெக்ஸிகோ எல்லையில் சுவர் எழுப்புவதற்காக 5 மில்லியன் (570 கோடி டாலர்) டாலர் நிதி ஒதுக்கும்படி அதிபர் நாடாளுமன்றத்தில் கேட்டுக்கொண்டார். ஆனால் அவரது இக்கோரிக்கையை எதிர்க்கட்சிகள் நிராகரித்தன.

இதனால் நிதி ஒதுக்கீடுக்கு ஒப்புதல் அளிக்க அதிபர் மறுத்து விட்டார். எனவே கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக அமெரிக்காவில் ஊழியர்களுக்கு சம்பளம் உட்பட செலவினங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படாமல் அரசுத் துறை செயலிழந்தன. லட்சக்கணக்கான பணியாளர்களுக்கு இன்னும் ஊதியம் வழங்கப்படாத நிலை தொடர்ந்து வருகிறது.

இந்நிலையில் அமெரிக்கா நாடாளுமன்ற செனட் சபையில் வியாழக்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் எல்லைச் சுவர் மசோதா தாக்கல் செய்யப்பட்டது.

இதற்கான சட்டம் இயற்றப்பட வாக்கு எண்ணிக்கை 60 தேவைப்படும் நிலையில் இதற்கு 51 வாக்குகள் மட்டுமே இதற்கு ஆதரவு கிடைத்தது. ட்ரம்ப் கொண்டுவந்த இம்மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து 47 வாக்குகள் விழுந்தன.

வாக்களிக்கலாம் வாங்க

'மிஸ்டர் லோக்கல்' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close