[X] Close
 

ரூ.950 கோடி செல்லாத நோட்டுக்கு என்ன பதில் செல்லபோகிறார் பிரதமர் மோடி?: பிரச்சினையுடன் வருகிறார் நேபாள பிரதமர்


troubled-with-rs-950-crore-demonetised-notes-nepal-pm-to-press-india-for-swap

  • போத்திராஜ்
  • Posted: 05 Apr, 2018 00:36 am
  • அ+ அ-

இந்தியாவில் பணமதிப்பிழப்பு நடவடிக்கை அறிவிக்கப்பட்டபின் நேபாள நாட்டில் மக்கள் வங்கிகளில் திருப்பி அளித்த ரூ.950கோடியை எப்படி பரிமாற்றம் செய்து கொள்வது என்பது குறித்து வரும் வெள்ளிக்கிழமை டெல்லி வரும் நேபாள பிரதமர் கே.பி.சர்மா ஒலி பிரதமர் மோடியிடம் ஆலோசிப்பார் எனத் தெரிகிறது.

நாட்டில் கள்ள நோட்டு, கறுப்பு பணம், ஊழல் ஆகியவற்றை ஒழிக்கும் நோக்கில் கடந்த 2016-ம் ஆண்டு, நவம்பர் 8-ம் தேதி பணமதிப்பிழப்பு நடவடிக்கையை பிரதமர் மோடி அறிவித்தார். இதன்படி, நாட்டில் புழக்கத்தில் இருந்த ரூ.500, ரூ.1000 நோட்டுக்கள் செல்லாது என அறிவிக்கப்பட்டன. ஏறக்குறைய ரூ.15.50 லட்சம் கோடி நோட்டுக்கள் செல்லாது என அறிவிக்கப்பட்டது.

இந்தியாவின் அண்டை நாடான நேபாளத்திலும், பூடானிலும் வசிக்கும் மக்கள் நம்நாட்டு வர்த்தகர்களுடன் வர்த்தகம் செய்ய இந்திய ரூபாயைத்தான் அதிகமாக பயன்படுத்தி வந்தனர். இந்தியாவில் நடைமுறைப்படுத்தப்பட்ட பணமதிப்பிழப்பு நடவடிக்கை, அந்த இரு நாட்டு மக்களையும் கடுமையாக பாதித்தது. மக்களும் தங்களிடம் இருந்த ரூ.500, ரூ.1000 நோட்டுகளை வங்கிகளில் கொடுத்து  மாற்றினார்கள்.

இந்த வகையில் நேபாள நாட்டு ரிசர்வ் வங்கியில் மட்டும் இந்திய மதிப்பில் ரூ.950 கோடிக்கு ரூ.500, ரூ.1000 நோட்டுகள் உள்ளன. இந்த நோட்டுகளை மாற்றுவது குறித்து இதுவரை மத்திய அரசு அந்நாட்டுடன் ஏதும் பேசவில்லை எனத் தெரிகிறது.

இந்நிலையில், வரும் வெள்ளிக்கிழமை நேபாள பிரதமர் கே.பி.சர்மா ஒலி இந்தியா வருகிறார். பிரதமர் நரேந்திர மோடி, குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் ஆகியோரைச் சந்தித்து பேச உள்ளார். அப்போது தங்கள் நாட்டு ரிசர்வ் வங்கியில் தேக்கிவைக்கப்பட்டுள்ள ரூ.950 கோடி ரூ.500, ரூ.1000 நோட்டுகளை எப்படி பரிமாற்றம் செய்து கொள்வது என்பது குறித்து பிரதமர் மோடியிடம் ஆலோசிப்பார் எனத் தெரிகிறது.

மேலும், சிறிய நாடான நேபாளத்துக்கு ரூ.950 கோடி அன்னியச் செலாவணி என்பது மிகப்பெரியதாகும். அமெரிக்க டாலர் மதிப்பில் 149 கோடி டாலராகும். ஆதலால், இந்த தொகையை எப்படி பரிமாற்றம் செய்யலாம் என்று பிரதமர் மோடியுடனான சந்திப்பில் அழுத்தம் கொடுத்து பேசுவார் எனத் தெரிகிறது.

சமீபத்தில் நேபாள நாடாளுமன்றத்தில் பேசிய பிரதமர் சர்மா ஒலி, “ இந்திய அரசு கொண்டு வந்த பணமதிப்பிழப்பு நடவடிக்கை நேபாள மக்களை வெகுவாபாதித்து விட்டது. பிரதமர் மோடியை சந்திக்கும் போது இந்த விஷயம் குறித்த எனது கவலைகளையும், மக்களின் வேதனைகளையும் தெரிவித்து தீர்வு காண்பேன்” எனத் தெரிவித்துள்ளார்.  

ஆதலால், வெள்ளிக்கிழமை டெல்லி வரும் நேபாள பிரதமர் ஒலி, பிரதமர் நரேந்திர மோடியைச் சந்திக்கும் போது பணமதிப்பிழப்பு நடவடிக்கை குறித்த பிரச்சினையை எழுப்புவார் எனத் தெரிகிறது.

இந்தியாவில் நடைமுறைப்படுத்தப்பட்ட பணமதிப்பிழப்புக்கு நடவடிக்கை மூலம் இன்னும் பல கேள்விகளுக்கு விடை கிடைக்காமல் மக்களும், அரசும், எதிர்க்கட்சிகளும் திணறுகிறார்கள். மக்களுக்கும், எதிர்க்கட்சிகளுக்கும் என்ன பதில் சொல்வது எனத் தெரியாமல் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு பல்வேறு விஷயங்களை காரணம் காட்டி திசை திருப்பியது.

இதில் மத்தியில் ஆளும் பாஜகவுக்கு குடைச்சல் கொடுக்க நேபாள அரசும் சேர்ந்துள்ளது. நேபாள மக்கள் ஒவ்வொருவரும் ரூ.4500 மாற்றிக்கொள்ள கடந்த ஆண்டு மார்ச் மாதம் இந்திய ரிசர்வ் வங்கி, நேபாள ரிசர்வ் வங்கியிடம் வாய்வழி மூலம் வாக்குறுதி அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.ஆனால் முறைப்படி எந்தவிதமான உறுதிமொழியும் ஆர்பிஐ அளிக்கவில்லை.

தொடர்புடைய செய்திகள்

 
 




Kalathin Vasanai - Kindle Edition


[X] Close