[X] Close

வெள்ளை மாளிகையில் எலிகள்!- வேலை தேடி வந்ததோ என கிண்டல் செய்த நெட்டிசன்கள்


rats-in-whitehouse

  • பாரதி ஆனந்த்
  • Posted: 20 Dec, 2018 12:39 pm
  • அ+ அ-

வெள்ளை மாளிகையில் பசுமை புல்வெளியில் திரிந்த எலிகள் குறித்து ஃபாக்ஸ் நியூஸ் செய்தி சேனலில் செய்தி வெளியான நிலையில் நெட்டிசன்கள் பலரும் எலி ஜோக்ஸ் பகிர ஆரம்பித்துள்ளனர்.

வாஷிங்டன் சாலைகளில் சமீப காலமாக சர்வசாதாரணமாக குறுக்கும் நெடுக்குமாக எலிகள் செல்ல அது செய்தியானது. சாலையோர குப்பைத் தொட்டிகளை கலைத்து உணவு மீதிகளை எடுத்துச் செல்லும் எலிக்கள் சுகாதாரத்துக்கு சவால் விடுப்பதாக இருக்கின்றன.

இந்த செய்தியின் தாக்கம் அடங்குவதற்குள்ளாகவே வெள்ளை மாளிகை புல் வெளியில் எலிகள் நடமாட்டம் ஆரம்பித்திருக்கிறது.

வெள்ளை மாளிகைக்காக ஃபாக்ஸ் நியூஸ் செய்தியாளார் ஜான் ராபர்ட்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு வீடியோவைப் பகிர்ந்தார். அதில், "நான் வெள்ளை மாளிகை புல்வெளியில் நிற்கிறேன். இங்கே எனது இடது காலுக்கு இடையே ஏதோ ஒன்று விறுவிறுவென ஓடியது. நானோ அது அனில் என நினைத்தேன். ஆனால் அது எலி" என்று ட்வீட் செய்தார்.

இந்த செய்தி நெட்டிசன்களை குஷியாக்கியதோ என்னவோ தொடர்ச்சியாக பலரும் எலி ஜோக்குகளைப் பகிரத் தொடங்கினர். 
ஒருவேளை எலி வேலை தேடி வெள்ளை மாளிகை சென்றிருக்குமோ என்றெல்லாம் அரசியல் உள்குத்துடன் ட்வீட்களைப் பகிர்ந்தனர்.
எலித் தொல்லைக்கு முடிவுகட்ட வெள்ளை மாளிகை பராமரிப்பு பணியாளார்கள் முனைப்பு காட்டி வருகின்றனராம்.

வாக்களிக்கலாம் வாங்க

'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close