[X] Close

8 மணி நேரத்துக்கும் அதிகமாக தூங்குகிறீர்களா?- அப்படியென்றால் இது உங்களுக்கான செய்தி


sleeping-too-much-can-lead-to-death

  • பாரதி ஆனந்த்
  • Posted: 08 Dec, 2018 11:02 am
  • அ+ அ-

ஒரு மனிதன் சராசரியாக 8 மணி நேரம் தூங்கினால் போதுமான ஓய்வும் புத்துணர்வும் உடலுக்கும் மனதுக்கும் கிடைத்துவிடும்.

ஆனால், சிலர் சதா சர்வகாலம் தலையணையைக் கண்டவுடன் தூங்குவர். இப்படித் தூங்குவர்களுக்கு எச்சரிக்கை விடுத்திருக்கிறது ஆய்வு முடிவு ஒன்று.

மெக்மாஸ்டர் அண்ட் பீக்கிங் யூனியன் மருத்துவக் கல்லூரி அண்மையில் ஓர் ஆய்வு மேற்கொண்டுள்ளது. அந்த ஆய்வில், 8 மணி நேரம் என்ற எல்லையைக் கடந்து உறங்குபவர்களுக்கு இதய நோய், ஸ்ட்ரோக், ஏன் மரணம்கூட சம்பவிக்க 41% அதிக வாய்ப்புள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆய்வு முடிவானது ஜார்னல் ஆஃப் யூரோப்பியன் ஹார்ட் (Journal of European Heart) என்ற மருத்துவ இதழில் பதிவிடப்பட்டுள்ளது.
அதேபோல் பகல் நேரத்தில் தூங்குபவர்களுக்கும் இதய நோய் ஏற்பட அதிக வாய்ப்பு இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் பரிந்துரைக்கப்பட்ட 6 மணி நேரம் முதல் 8 மணி நேரத்துக்கு உள்ளதாக தூங்குபவர்களுக்கும் இதய நோய் தாக்க அதிகம் வாய்ப்பிருப்பதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரவில் 6 மணி நேரத்துக்கு அதிகமாக தூங்கிவிட்டு பின்னர் பகல் வேளையிலும் தூங்கினால் அவர்களுக்கு நிச்சயம் மிகப்பெரிய அளவில் கார்டியோவாஸ்குலர் இதய நோய்கள் வரும் என்று ஆய்வறிக்கை ஆணித்தரமாக கூறுகிறது.
எதுவாக இருந்தாலும் மிகினும் குறைவினும் நோய் செய்யும் என்பதை நினைவில் கொண்டு நம் வாழ்வியல அமைத்தல் நல்லது.

வாக்களிக்கலாம் வாங்க

'சிந்துபாத்' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close