தேர்தல் வெற்றிக்கு விற்கப்படும் அந்தரங்கம்!


இங்கிலாந்தைச் சேர்ந்த ‘கேம்ப்ரிட்ஜ் அனாலிடிக்கா’ என்ற அரசியல் ஆலோசனை நிறுவனம், ஃபேஸ்புக்கிலிருந்து தனிநபர்களின் தகவல்களைத் திரட்டி அதை தனது வாடிக்கையாளர்களின் தேர்தல் வெற்றிக்காகப் பயன்படுத்தியுள்ளது அம்பலமாகியுள்ளது.

அலெக்ஸாண்டர் கோரகன் என்பவர் உருவாக்கிய செயலியைத் தரவிறக்குபவர்கள் தாங்கள் ஃபேஸ்புக்கில் பதிவேற்றியுள்ள தகவல்களை அந்தச் செயலியுடன் பகிர ஒப்புக்கொள்கிறார்கள். 2,70,000 பேர் இந்தச் செயலியை தரவிறக்கம் செய்துள்ளனர்.

ஆனால் அவர்களது ஃபேஸ்புக்நண்பர்களாக இருக்கும் 5 கோடி பேரின் தகவல்களையும் சேர்த்து எடுத்துக்கொண்டது இந்தச் செயலி. இவை ‘கேம்ப்ரிட்ஜ்’ நிறுவனத்துக்கு சட்டவிரோதமாக விற்கப்பட்டுள்ளன.

இந்தத் தகவல்களை வைத்து தனிநபர்களின் அரசியல் பார்வையை ஆராய்ந்து, தங்களது வாடிக்கையாளரின் வாக்காளராக மாற்றப்படக் கூடியவர்களிடம் இணைய வழி பிரச்சாரத்தை மேற்கொண்டுள்ளது ‘கேம்ப்ரிட்ஜ்’ நிறுவனம். இந்த வகையில், அமெரிக்க அதிபர் தேர்தலில் தனது வாடிக்கையாளரான டொனால்ட் ட்ரம்ப் வெற்றிபெற, இந்த நிறுவனம் உதவியிருக்கிறது.

x