கண்டியில் ஏன் கலவரம்?


உலகுக்கு அன்பையும் அமைதியையும் போதித்த புத்தரின் புனிதப் பல் அமைந்துள்ள கண்டி த‌லதா மாளிகை வீதி, இன்று கலவர பூமியாகக் காட்சியளிக்கிறது.

சிங்களர், வடகிழக்குத் தமிழர், மலையகத் தமிழர், இஸ்லாமியர் என்று பன்மைக் கலாச்சாரம் கொண்ட நாடு இலங்கை. பலமாக இருக்க வேண்டிய இந்த அம்சமே இன்று அந்த நாட்டுக்குப் பிரச்சினையாக உருவெடுத்திருக்கிறது. சிங்களர் - தமிழர் இடையே மூன்று தசாப்தங்களாக நீடித்த யுத்தம் முடிவுக்கு வந்து ஒரு தசாப்தம்கூட முடியவில்லை. அதற்குள் சிங்கள பவுத்த‌ர் -இஸ்லாமியர் மோதலால் அந்த தேசம் பேரதிர்ச்சியில் உறைந்துபோயிருக்கிறது.

கொத்து பரோட்டாவால் கலவரம்

கடந்த பிப்ரவரி 26-ம் தேதி அம்பாறை நகரில் உள்ள முஸ்லிம் ஹோட்டலில் கொத்து பரோட்டா சாப்பிடச் சென்ற சிங்கள இளைஞர்கள், ஹோட்டல் ஊழியரை மிரட்டி, “பாகிஸ்தானிலிருந்து கொண்டுவரப்பட்ட ஆண்மலட்டுத்தன்மை மருந்து இந்தக் கொத்து பரோட்டாவில் கலக்கப்பட்டிருக்கிறதா?” என்று கேட்க, அவர் அச்சத்தில் “ஆம்”

x