விட்டாச்சு லீவு... என்பதைப் போல தனக்கு விவாகரத்து உறுதியானதை கைகளில் மெஹந்தி போட்டு சந்தோஷமாக கொண்டாடி இருக்கிறார் இளம்பெண் ஒருவர். அதை வீடியோ எடுத்ஹ்டு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் வெளியிட்டு தன்னுடைய மகிழ்ச்சியைப் பகிர்ந்துள்ளார்.
சமூக வலைத்தளங்களில் இந்த வீடியோ வைரலாகி வரும் நிலையில், இத்தனை உற்சாகமாக இருக்கும் இந்த பெண்மணி தனது கணவரால் எவ்வளவு மன அழுத்தத்தில் வாழ்க்கையை நகர்த்தி வந்திருப்பார் என்று பலரும் கமெண்ட் செய்து, இனியாவது அவருக்கு வாழ்க்கை வசப்படட்டும் என்று தங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.
சமீபகாலமாக நாடு முழுவதுமே விவாகரத்து எண்ணிக்கைகள் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது. ப்ரீ வெட்டிங் போட்டோ ஷூட் என்றழைக்கப் படுகிற திருமணத்திற்கு முந்தைய கொண்டாட்டங்கள் அதிகரித்து வரும் அதே வேளையில் விவாகரத்து ஆன பின்னர் கேக் வெட்டிக் கொண்டாடுவது, டைவர்ஸ் போட்டோஷூட்கள் போன்றவைகளும் சமீப நாட்களில் பெருகி வருகின்றன.
சமீபத்தில் ஒருவர் தனது மனைவியிடம் இருந்து அதிகாரப் பூர்வமாக விவாகரத்து கிடைத்த நிலையில், தன் மனைவியைப் போலவே ஒரு பொம்மை செய்து, தனது விவாகரத்தைக் கொண்டாடியது வைரலானது குறிப்பிடத்தக்கது.
https://www.instagram.com/reel/DDPF3W2oDcv/?utm_source=ig_web_copy_link