குற்றாலம் ஐந்தருவியில் மலைப்பாம்பு மீட்பு


ஐந்தருவி பகுதியில் மலைப்பாம்பை தீயணைப்பு படையினர் மீட்டனர்.

தென்காசி / திருநெல்வேலி: ஐந்தருவியில் நேற்று சுற்றுலா பயணிகள் குளித்துக் கொண்டிருந்தனர். அப்போது, அருவிக்கு மேல் பகுதியில் குரங்கு ஒன்று மலைப்பாம்பிடம் சிக்கி சத்தமிட்டுக் கொண்டு இருந்ததை சுற்றுலா பயணிகள் பார்த்தனர்.

இது குறித்து செங்கோட்டை தீயணைப்புப் படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக தீயணைப்புப் படையினர் விரைந்து சென்று, குரங்கை மீட்டு விடுவித்தனர். மேலும், சுமார் 10 அடி நீளமுள்ள மலைப் பாம்பை பிடித்து, வனத்துறையினரிடம் ஒப்படைத் தனர். இதையடுத்து அடர்ந்த வனப்பகுதியில் மலைப்பாம்பு விடப்பட்டது.

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் பாபநாசத்தில் குடியிருப்பு பகுதியிலுள்ள மாட்டுத் தொழு வத்தில் பதுங்கியிருந்த மலைப் பாம்பை வனத்துறையினர் மீட்டனர். பாபநாசம் பொதிகையடி நடுத்தெரு முத்து என்பவரது மாட்டுத் தொழுவத்தில் மலைப் பாம்பு ஒன்று புகுந்ததாக பாபநாசம் வனச்சரக அலுவலருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து பாபநாசம் வனச்சரகர் சத்திய வேலின் உத்தரவின் பேரில் வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அங்கு பதுங்கி இருந்த மலைப்பாம்பை பத்திரமாக மீட்டனர். பின்னர் அந்த மலைப்பாம்பு கோரையார் பீட் வனப்பகுதிக்குள் விடப்பட்டது.