மெட்ரோ ரயிலில் கையும், களவுமாக சிக்கிய திருடன்... வைரலாகும் வீடியோ!


பயணியிடம் அடிவாங்கும் திருடன்.

டெல்லியில் மெட்ரோ ரயிலில் பயணம் செய்த பெண்ணின் பணப்பையை திருட முயன்ற திருடன் கையும், களவுமாக சிக்கி உதை வாங்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

டெல்லியில் திருட்டுச் சம்பவங்கள் தற்போது அதிகரித்து வருகிறது. பேருந்து, ரயில், சந்தை, சாலை என மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள இடங்களில் பட்டப்பகலில் மக்களின் விலையுயர்ந்த பொருட்கள் மற்றும் பணப்பைகள் கொள்ளையடிக்கப்படுகின்றன. டெல்லி மெட்ரோவில் பெண்ணின் பர்ஸ் திருடு போன சம்பவம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

அந்த வீடியோவில், நெரிசலான ரயிலில் பணப்பையை திருடிய திருடனை நடுத்தர வயது நபர் ஒருவர் கன்னத்தில் அறைகிறார். பிடிபட்ட திருடன், இந்த வேலையை மீண்டும் செய்ய மாட்டேன் என்று அடிப்படவரிடம் கெஞ்சுகிறார். ஆனால், திருடனின் கோரிக்கையை காதில் வாங்கிக் கொள்ளாமல், பயணிகள் முன்னிலையில் அந்த திருடனின் கன்னத்தில் அறைகிறார். இதனால் தனது செயலுக்கு மன்னிப்பு கேட்பதாக அடிப்பவரின் கால்களைப் பிடிக்க முயற்சிக்கிறார். ஆனால், அவரது மார்பில் உதைத்ததுடன், திருடனை அவர் பல முறை அடிக்கிறார்.

காஷ்மீரி கேட் மெட்ரோ ரயில் நிலையத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இந்த சம்பவம் எந்த தேதியில் நடைபெற்றது என்று தெரியவில்லை ஆனால், சமூக வலைதளங்களில் வீடியோ வைரலாகி வருகிறது. இது போன்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்க, மெட்ரோ மார்ஷல்களை எங்கே நியமித்துள்ளனர் என மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.