ஆசிரியையுடன் பள்ளி முதல்வர் ரொமன்ஸ்... வைரலாகும் புகைப்படம்!


உத்தரப்பிரதேசத்தில் உள்ள தனியார் பள்ளியின் முதல்வர், ஆசிரியர் ஒருவருடன் ரொமான்ஸ் செய்யும் புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

உத்தரப்பிரதேச மாநிலம், லக்னோவில் ஜான்பூரில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் இந்த தகாத சம்பவம் நடைபெற்றுள்ளது. அறிவின் கோவில், கூப்பிய கைகளுடன் உள்ளே நுழையுங்கள் என்று எழுதப்பட்டுள்ள பள்ளியில் தான் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.

பகத்சிங், மகாராணா பிரதார், அடல் பிஹாரி வாஜ்பாய் மற்றும் அபிநந்தன் வர்தமான் ஆகியோரின் புகைப்படங்கள் பள்ளிச் சுவற்றில் தொங்க விடப்பட்டுள்ளன. அந்த சுவற்றின் அடியில் பெண் ஆசிரியை ஒருவரை தலைமை ஆசிரியர் கட்டிப்பிடித்து ரொமான்ஸ் செய்யும் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வெளியான நிலையில், உத்தரப்பிரதேச மாநிலத்தைக் கடந்தும் தற்போது வைரலாகி வருகிறது. பள்ளியில் இப்படி கேவலமான செயலில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நெட்டிசன்கள் வலியுறுத்தியுள்ளனர்.