இளம்பெண்ணின் ஷூவிற்குள் பதுங்கியிருந்த நாகப்பாம்பு: வைரலாகும் வீடியோ!


இளம்பெண் ஒருவர் ஷூ போடும் போது அதற்குள் நாகப்பாம்பு பதுங்கியிருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுதொடர்பான வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

ஷூ போடும் போது எப்போதும் கவனமாக இருப்பது நல்லது. ஏனெனில், சாக்ஸ் இருக்கும் இடத்தில் பாம்பு குடியேற வாய்ப்பு உள்ளது. ஷூ அணியவிருந்த ஒரு இளம்பெண் ஒருவர் பாம்பு கடியில் இருந்து அதிர்ஷ்டவசமாக தப்பியுள்ளார். மழையின் காரணமாக ஷூவிற்குள் நாகப்பாம்பு உறங்கிக் கொண்டிருந்ததை கண்டு இளம்பெண் அதிர்ச்சியடைந்தார்.

வைரலாகி வரும் இந்த வீடியோவில், ஷூவிற்குள் நாகப்பாம்பு மறைந்திருப்பதைப் பார்த்தவுடன் அந்த இளம்பெண் பீதியில் அலறினார். இதனையடுத்து பாம்பு பிடிப்பவரை உடனடியாக அவரது குடும்பத்தார் அழைத்தனர். பாம்பு பிடிப்பவர் ஷூவிற்குள் இருந்த நாகப்பாம்பை பத்திரமாக வெளியே எடுத்துள்ளார்.

@MindhackD என்ற ட்விட்டர் கணக்கில் ஜூலை 3-ம் தேதி பகிரப்பட்ட இந்த வீடியோ, ஆயிரத்துக்கும் மேற்பட்ட பார்வைகளைப் பெற்றுள்ளது. இதன் பின்னூட்டத்தில் நிறைய நெட்டிசன்கள், ஷூ அணிவதற்கு முன் கவனமாக இருக்க வேண்டும் என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.