மாமல்லபுரத்தில் புராதன சின்னங்களை வெள்ளிக்கிழமை கட்டணமின்றி கண்டு ரசிக்கலாம்!


மாமல்லபுரம்: உலக பாரம்பரிய தினத்தையொட்டி மாமல்லபுரத்தில் உள்ள புராதன சின்னங்களை சுற்றுலா பயணிகள் நாளை (ஏப்.18) கட்டணமின்றி கண்டு ரசிக்கலாம் என தொல்லியல் துறை தெரிவித்துள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்தில் தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் அமைந்துள்ள பல்லவ மன்னர்களின் கலைச்சின்னங்களான கடற்கரை கோயில், ஐந்துரதம், அர்ஜூனன் தபசு, கிருஷ்ண மண்டபம் மற்றும் வெண்ணை உருண்டை பாறை, புலிகுகை உள்ளிட்ட புராதன சின்னங்கள் அமைந்துள்ளன.

இங்குள்ள புராதன சின்னங்களை அருகில் கண்டு ரசிப்பதற்காக இந்தியர்களுக்கு ரூ.40 மற்றும் வெளிநாட்டவர்களுக்கு ரூ.600 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இந்நிலையில், இந்திய தொல்லியல் துறை சார்பில் நாடு முழுவதும் உள்ள பாரம்பரிய சின்னங்கள் உள்ள இடங்களில் நாளை (ஏப்.18) உலக பாரம்பரிய தினம் அனுசரிக்கப்படுகிறது.

மேலும், உலக பாரம்பரிய தினத்தை முன்னிட்டு நாளை ஒரு நாள் மட்டும் சுற்றுலாப் பயணிகள் எவ்வித நுழைவு கட்டணமின்றி புராதன சின்னங்களை கண்டு ரசிக்கலாம் என தொல்லியல்துறை தெரிவித்துள்ளது. உலக பாரம்பரிய தினத்தையொட்டி நாளை யோகா உள்ளிட்ட பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

x