புதுவையில் கூட்டுறவு வங்கியின் ஏடிஎமில் தமிழ்மொழி புறக்கணிப்பு: மக்கள் அவதி


புதுச்சேரி: புதுச்சேரி மற்றும் தமிழகத்தில் உள்ள வங்கி ஏடிஎம் இயந்திரங்களில் உள்ள தொடு திரைகளில் தமிழ், ஆங்கிலம், இந்தி மொழிகள் இடம் பெற்றுள்ளன. இதில், தமிழ், ஆங்கிலம் அதிகளவில் பயன்பாட்டு மொழிகளாக உள்ளன.

இந்நிலையில் புதுச்சேரி லாஸ்பேட்டை விமான நிலைய சாலையில் உள்ள, புதுச்சேரி அரசின் மாநில‌ கூட்டுறவு வங்கியின் ஏடிஎம் மையத்தில் உள்ள ஏடிஎம் இயந்திர தொடுதிரையில் தமிழ் மொழியை தவிர்த்து இந்தி மற்றும் ஆங்கில மொழிகள் இடம்பெற்றுள்ளன. இதனால் பணம் எடுக்கச் சென்ற வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். மேலும், தமிழ் மொழியை மட்டுமே புரிந்துகொள்ள முடிந்தவர்கள், பணம் எடுக்க முடியாமல் அவதியடைந்து வருகின்றனர்.

கடந்த சில நாட்களாகவே இந்நிலை காணப்படுகிறது. அவசர தேவைக்கு ஏடிஎம்மில் பணம் எடுக்க முடியாமல் பாதிக்கப்படுவதாக பலரும் தெரிவித்தனர். இதனால் தேவையற்ற குழப்பம் ஏற்படுவதை சரி செய்ய வங்கி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

x