தண்ணீர் தொட்டியில் மூழ்கி ஒன்றரை வயது ஆண் குழந்தை உயிரிழப்பு: தென்காசி சோகம்


தென்காசி: புளியரை அருகே உள்ள வல்லம் பகுதியைச் சேர்ந்த தம்பதியர் இசக்கிராஜ் - திவ்யா. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

திவ்யா, தனது 2 குழந்தைகளுடன் கற்குடி கிராமத்தில் உள்ள தாய் வீட்டுக்கு சென்றிருந்தார். அங்கு விளையாடிக் கொண்டு இருந்த இவரது ஒன்றரை வயது குழந்தை விஷால், தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்துள்ளது. இதைப் பார்த்த திவ்யா, குழந்தையை மீட்டு சிகிச்சைக்காக செங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்.

அங்கு பரிசோதித்த மருத்துவர்கள், குழந்தை ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக கூறினர். புளியரை போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

x