சென்னை: தமிழக முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரை தலைமைச் செயலகத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் நேற்று சந்தித்தார். உச்சநீதிமன்ற தீர்ப்பின் மூலம் மாநில உரிமைகளை பாதுகாத்ததற்காக முதல்வருக்கு பாராட்டும் வாழ்த்தும் தெரிவித்தார். மநீம துணைத் தலைவர் ஏ.ஜி.மவுரியா, பொதுச்செயலாளர் ஆ.அருணாச்சலம் ஆகியோர் உடனிருந்தனர்.
பின்னர் கமல்ஹாசன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: மாநிலங்களவை இடத்துக்கு யார் என்று முடிவானதும் அப்போது நன்றி சொல்ல வருவோம். இப்போது முதல்வரை கொண்டாட வந்திருக்கிறோம். உச்சநீதிமன்ற தீர்ப்பு நமக்கு சாதகமானது என்பதைவிட இந்தியாவுக்கே சாதக மானது என்று சொல்லலாம். இவ்வாறு கமல்ஹாசன் கூறினார்.
இதனிடையே சமூக வலைத் தளத்தில் கமல்ஹாசன் வெளியிட்டுள்ள பதிவில், "மாநிலங்களின் உரிமையைக் காப்பதிலும், மாநில சுயாட்சியை வலியுறுத்துவதி லும், ஜனநாயகத்துக்கு வலிமை சேர்ப்பதிலும் ஒட்டுமொத்த இந்தியாவிலும் சாம்பியனாகத் திகழ்கிறார் மு.க.ஸ்டாலின்" என்று குறிப்பிட்டுள்ளார்.