அதிமுக கொடியை பயன்படுத்த தடை கோரி டிடிவி தினகரனுக்கு எதிராக இபிஎஸ் தொடர்ந்த வழக்கு வாபஸ்


சென்னை: அ​தி​முக கொடி, ஜெயலலிதா பெயர், புகைப்​படத்தை பயன்​படுத்த கூடாது என தடை விதிக்க கோரி டிடி​வி தினகரனுக்கு எதி​ராக அதி​முக தரப்​பில் தாக்​கல் செய்​யப்​பட்​டிருந்த வழக்கை அதி​முக பொதுச் செய​லா​ளர் பழனி​சாமி வாபஸ் பெற்​றுள்​ளார். இதையடுத்​து, இந்த வழக்கை தள்​ளு​படி செய்து சென்னை அமர்வு நீதி​மன்​றம் உத்​தர​விட்​டுள்​ளது.

முன்​னாள் முதல்​வர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு, அதி​முக பொதுச் செய​லா​ள​ராக பதவி வகித்த வி.கே.சசிகலா, துணை பொதுச் செய​லா​ள​ராக பதவி வகித்த டிடி​வி தினகரன் ஆகியோர் கடந்த 2017-ம் ஆண்டு நடத்​தப்​பட்ட அதி​முக பொதுக்​குழு தீர்​மானங்​களின் அடிப்​படை​யில் கட்​சி​யில் இருந்​தும், பதவி​யில் இருந்​தும் நீக்​கப்​பட்​டனர். இதை எதிர்த்து இரு​வரும் சென்னை அமர்வு நீதி​மன்​றத்​தில் வழக்கு தொடர்ந்​தனர்.

இந்த நிலை​யில், தினகரன் கடந்த 2018-ம் ஆண்டு அம்மா மக்​கள் முன்​னேற்ற கழகம் என்ற பெயரில் புதிய கட்​சியை தொடங்​கி​னார். அப்​போது அதி​முக​வின் கருப்​பு, வெள்​ளை, சிவப்பு நிறகொடி​யில் ஜெயலலிதா படம் இருப்​பது​போல கட்​சிக் கொடியைதினகரன் அறி​முகம் செய்​தார். இதையடுத்​து, அதி​முக​வின் கொடி, ஜெயலலி​தா​வின் பெயர் மற்​றும் புகைப்​படத்தை பயன்​படுத்த கூடாது என தினகரனுக்கு தடை விதிக்க கோரி​யும், அதி​முக கொடி போல அமமுக கொடியை வடிவ​மைத்​ததற்​காக ரூ. 25 லட்​சம் இழப்​பீடு கோரி​யும் அதி​முக ஒருங்​கிணைப்​பாளர் என்ற முறை​யில் ஓ.பன்​னீர்​செல்​வ​மும், இணை ஒருங்​கிணைப்​பாளர் என்ற முறை​யில் பழனி​சாமி​யும் சென்னை 3-வது கூடு​தல் அமர்வு நீதி​மன்​றத்​தில் கடந்த 2019-ம் ஆண்டு உரிமை​யியல் வழக்கு தொடர்ந்​தனர். இந்த வழக்கு நீண்​ட​கால​மாக நிலு​வை​யில் இருந்​தது.

இந்​நிலை​யில், அமர்வு நீதி​மன்​றத்​தில் நீதிபதி ஆர்​கேபி.தமிழரசி முன்பு இந்த வழக்கு நேற்று விசா​ரணைக்கு வந்​தது. அப்​போது, இந்த வழக்கை வாபஸ் பெற்​றுக்​கொள்​வ​தாக பழனிசாமி தரப்​பில் ஆஜரான வழக்கறிஞர் மனு தாக்​கல் செய்​தார். இதையடுத்து நீதிப​தி, ​தினகரனுக்கு எதி​ராக பழனி​சாமி தொடர்ந்​திருந்த வழக்கை வாபஸ் பெற அனு​ம​தித்து வழக்கை தள்​ளு​படி செய்​தார். அதி​முக பாஜக​வுடன் கூட்​டணி வைத்​துள்ள நிலை​யில் ஏற்​கெனவே பாஜக கூட்​ட​ணி​யில் அங்​கம் வகிக்​கும் டிடி​வி​தினகரனுக்கு எதி​ரான வழக்கை திடீரென வாபஸ்​ பெற்​றிருப்​பது அரசி​யல்​ வட்​டாரத்​தில்​ பரபரப்பை ஏற்படுத்தியுள்​ளது.

x