மதுரை வடக்கு தொகுதி எம்எல்ஏ கோ.தளபதி தாயார் மறைவு: முதல்வர் இரங்கல்


மதுரை: மதுரை வடக்கு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் கோ.தளபதியின் தாயார் மறைவுக்கு தமிழக முதல்வர் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில், மதுரை வடக்கு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினரும், மதுரை மாநகர் தி.மு.க. செயலாளருமான கோ.தளபதியின் தாயார் மாரியம்மாள் முதுமை காரணமாக மறைவெய்திய செய்தி அறிந்து வருந்துகிறேன். ஆளாக்கி வளர்த்த அன்பு அன்னை யை இழந்து வாடும் தளபதிக்கும் அவர்தம் குடும்பத்தாருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

x